90 நாட்களே ஆன திமுக ஆட்சியில் 1.80 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது மிகப் பெரிய சாதனை திருச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேர்காணல்
திருச்சி,
அரசு மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடல் மற்றும் அறுவை சிகிச்சை செய்த நோயாளியை பார்வையிட்டனர். பின்னர் மருத்து வமனையில் சிகிச்சை பிரிவுகளை ஆய்வு மேற்கொண்டனர்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நேற்று மாலை கொரோனா காலத்தில் மூளைச் சாவு அடைந்த சமயபுரத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்வராஜின் சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவை தானம் பெறப்பட்டு 3 பேருக்கு பொருத்தப்பட்டன. இதையொட்டி, செல்வராஜின் குடும்பத்தினருக்கு நினைவுக் கேடயம், சான்றிதழ் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினருக்கு சான்றிதழ் ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் உடல்களை தானம் வழங்கிய குடும்பத்தினர் எங்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருமாறு கேட்டு கொண்டார். அதற்கு பதில் அளித்த சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணி
யன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு நிச்சயம் படிப்பிற்கு தேவையான அரசு வேலைக்கு உதவி செய்வதாக கூறினார்.

தொடர்ந்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருரூ.14 இலட்சம் மதிப்புள்ள் ஐசிஐசிஐ வங்கி மூலம் வந்த ஆர்.டி.பி.சி.ஆர்.கருவியை மருத்துவமனை முதல்வரிடம் வழங்கியும், திருச்சி பிளைவுட்ஸ், ஹார்டுவேராஜ் சங்கம் சார்பாகரூ.2.5 இலட்சம் மதிப்புள்ள ஆழ்துளை குழாய் கிணறுஅமைத்துக் கொடுத்த நபர்களை கௌரவித்தார். பின்னர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ரூ. 3 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆக்ஸிஜன்செறிவூட்டிகளை திருச்சி மாவட்ட கொரானா தடுப்பு பொறுப்பாளர் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அப்போலோ மருத்துவ மனையில் சமூகப் பொறுப்புகளுடன் கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்களிக்கும் 2ஆயிரம் நபர்களுக்கான தடுப்பூசி போடும் நிகழ்வினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது : கொரோனோ காலங்களில் மற்ற மருத்துவம் சரியாக பார்க்க வில்லை என சில மருத்துவமனைகள் மீது புகார் இருந்தது – ஆனால் திருச்சியை பொறுத்த வரை எல்லா துறைகளிலும் மிக சிறப்பாக செயலாற்றி வந்துள்ளனர். ஐசி.ஐசி.ஐ நிறுவனம் மூலம் ஆர்.டி.பி.சி.ஆர் கருவியை வழங்கு உள்ளனர்,மேலும் பலர் மருத்துமனைக்கு பல உதவியை செய்து உள்ளனர்.
’’நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குப் பெறுவதற்கான முயற்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அளித்த அறிக்கையைப் பெற்று, சட்ட வல்லுநர்களுடன் தொடர்ந்து முதல்வர் விவாதித்து வருகிறார். நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் இதில் உறுதியாக இருக்கிறோம். கால அவகாசம் இருந்தால் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
திமுக தேர்தல் அறிக்கையில், சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி, அழுத்தம் கொடுத்து, நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த வகையிலான முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து விலக்கு பெற முதல்வர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். முதல் கூட்ட தொடரிலே சட்ட மன்றத்தில் தீர்மானம் இயற்றி ஜனாதிபதக்கு அனுப்பி அழுத்தம் கொடுப்பதே எங்கள் நிலைபாடு.
நீட் தேர்வெழுத விண்ணப்பிப்பதற்கான காலம் முடிந்துவிட்டதாகக் கருத முடியாது. அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான, தகுந்த பயிற்சி அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் கூட கால அவகாசம் உள்ளது,மாணவர்களுக்கு தேவையான பயர்ச்சி அளிக்க முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்,தேர்வுக்கு முன்பாக இன்னும் ஏரளமான மாணவர்கள் கண்டிப்பாக தேர்வுக்கு தயார் ஆவார்கள்.
கொரோனோ காலகட்டத்தில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்களுக்கு பணி வழங்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம், யாருக்கெல்லாம் பணி வழங்க முடியுமோ அவர்களுக்கு கண்டிப்பாக வழங்கப்படும். கோவாக்சின் இட்டுக் கொண்டவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசியும் இட்டுக் கொள்ளலாம் என்று ஐசிஎம்ஆர் முடிவெடுத்து, தடுப்பூசி குழுவுக்குத் தகவல் அளித்துள்ளது. இதுதொடர்பாகத் தடுப்பூசி குழு அறிவித்தபிறகு தமிழ்நாட்டில் முறையாகச் செயல்படுத்தப்படும்.
மருத்துவத் துறையில் தற்காலிக அடிப்படையில் 30,000 பேர் உள்ள நிலையில் அவர்களை நிரந்தரம் செய்வது சாத்தியமில்லை. கரோனா காலத்துக்குப் பிறகு எங்கெங்கு எவ்வளவு பணியிடங்கள் காலியாக உள்ளன. எந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர் என்றெல்லாம் ஆய்வு செய்து, யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் முதல்வரின் அறிவுரையின் படி நல்ல தீர்வு எடுக்கப்படும்.
மத்திய அரசு ஜூலை மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு 17 லட்சம் தடுப்பூசிகள் உட்பட மொத்தம் 72 லட்சம் தடுப்பூசிகளே முதலில் தருவதாக இருந்தது. ஆனால், கொரோனா தடுப்பூசி இடுவதில் கடந்த 2 மாதங்களாகத் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதைப் பாராட்டி, ஜூலை மாதத்தில் 19 லட்சம் தடுப்பூசிகளைக் கூடுதலாக அளித்துள்ளது.
இந்த ஆகஸ்ட் மாதம் 79 லட்சம் தடுப்பூசிகளைத் தருவதாகக் கூறியுள்ளது. கடந்த மாதத்தைப் போலவே ஆகஸ்ட் மாதத்திலும் சிறப்பான செயல்பாடு இருக்கும். மத்திய அரசு கூடுதல் தடுப்பூசிகளைத் தரும் என்று கருதுகிறோம். தமிழ்நாட்டில் இதுவரை 2,32,87,240 தடுப்பூசிகள் வரப்பெற்று 2,32,30,231 தடுப்பூசிகள் இடப்பட்டு, நேற்று காலை நிலவரப்படி 7,06,196 தடுப்பூசிகள் கையிருப்பில் இருந்தன.
இதேபோல், தனியார் மருத்துவமனைகளில் 20 நாட்களுக்கு முன்புவரை 4.50 லட்சம் தடுப்பூசிகள்தான் வாங்கப்பட்டிருந்தன. முதல்வரின்அறிவுறுத்தலுக்கேற்ப 20,47,560 தடுப்பூசிக ளை தனியார் மருத்துவமனைகள் வாங்கியுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 17,16,562 தடுப்பூசிகள் இடப்பட்டு, 3,30,998 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழ்நாட்டில் தற்போது நாள்தோறும் 2.50 லட்சம் முதல் 3 லட்சம் தடுப்பூசிகள் வரை இடப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் இதுவரை இடப்பட்டுள்ள தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 2,49,46,763. அதிமுக அரசு 2021 ஜன.16-ம் தேதி முதல் மே 6-ம் தேதி வரை 103 நாட்கள் கொரோனா தடுப்பூசி இடும் பணியை மேற்கொண்டது. இந்த நாட்களில் அதிமுக அரசு சார்பில் 74 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே இடப்பட்டிருந்தன. 90 நாட்களே ஆன திமுக ஆட்சியில் 1.80 கோடி தடுப்பூசிகள் இடப்பட்டுள்ளன. இது மிகப் பெரிய சாதனை’’.
மருத்துவமனைக்கு என்ன தேவை,எந்தெந்த துறைகளில் மருத்துவர்கள் தேவை என்பது குறித்து கேட்டுள்ளோம் கண்டிப்பாக அதனை நிரப்ப நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி முதல்வர் வனிதா, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான்,சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், இனிக்கோ இருதயராஜ், கதிரவன், அப்துல் சமத் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கே.எம்.ஷாகுல்ஹமித்