பின்னர் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பேசியதாவது: இந்த 75-வது சுதந்திர தினவிழாவில் அனைத்து மக்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இந்த ஆண்டு சுதந்திரதினம், மக்களுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கட்டும் ஜெய் ஹிந்த்” எனத் தெரிவித்தார்.”சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவில்கொள்ள வேண்டிய தினம் இது. “பிரிவினையின் போது நாட்டு மக்கள் சந்தித்த துயரங்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆகஸ்ட் 14-ஐ பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினமாக அனுசரிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். 
தீவிரவாதிகளுக்கு எதிரான துல்லியத் தாக்குதல், வான்வெளித் தாக்குதல் மூலம் புதிய இந்தியாவுக்கான செய்தியை உலகிற்கு இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியா மாறி வருகிறது என்பதைத்தான் இது காட்டுகிறது, இந்தியா எந்த கடினமான முடிவு களையும் எடுக்கத் தயங்காது எனக் காட்டியுள்ளது.
இரண்டாம் உலகப்போருக்குப்பின் சர்வதேச உறவுகளின் இயல்புகள் மாறிவிட்டன. அதேபோல கரோனா வைரஸ் பெருந்தொற்றுக்குப்பின் புதிய உலகம் உருவாக சாத்தியம் ஏற்பட்டுள்ளது. உலகின் முயற்சிகளை பார்த்த இந்தியா அதை பாராட்டியுள்ளது. அதேநேரம் இந்தியாவை புதிய கண்ணோட்டத்தில் உலகம் பார்க்கிறது. இரு விதமான கண்ணோட்டங்கள் இதில் அடங்கியுள்ளன.
தீவிரவாதம் மற்றும் எல்லைகளை ஆக்கிரமிக்கும் செயல். இந்த இரு சவால்களுக்கு எதிராகவும் இந்தியா துணிச்சலாகப் போராடி, பதிலடி கொடுத்து வருகிறது. (சீனா, பாகிஸ்தான் பெயரைக் குறிப்பிடவில்லை) இந்த தேசத்தைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் கரங்களை வலுப்படுத்துவதில் எந்தவிதமான பின்னடைவும் இருக்காது. அதேநேரம் கடினமான முடிவுகளை எடுக்கவும் இந்தியா ஒருபோதும் தயங்காது.
கொரோனா பெருந்தொற்றை இந்தியர்கள் மிகுந்த பொறுமையுடன் எதிர்கொண்டனர். நம்முன் பல சவால்கள் இருந்தன. ஆனால், அனைத்துத் துறைகளிலும் சிறப்பான வேகத்தில் செயல்பட்டோம். இந்தியத் தொழில் துறையினர் மற்றும் விஞ்ஞானிகள் பலத்தின் வெளிப்பாடுகள்தான் இவை. இன்றைக்கு நாம் தடுப்பூசிக்காக மற்ற நாடுகளைச் சார்ந்திருக்கத் தேவையில்லை.
தடுப்பூசி செலுத்தும் திட்டம் மிகப் பெரிய அளவில் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருவதை நாம் பெருமையுடன் கூறலாம். இதுவரை 54 கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். எல்லா நாடுகளின் வளர்ச்சிப் பாதைகளிலும் புதிய உறுதிமொழிகளுடன் முன்னோக்கி செல்வதற்கான ஒரு தருணம் வரும். அந்தத் தருணம் தற்போது இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் வந்துள்ளது.”
கொரோனா பெருந்தொற்றின்போது ஒவ்வொரு தருணத்திலும் மற்றவர்களுக்கு சேவையாற்றி உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்றிய நமது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்கும் பணியிலிருந்த விஞ்ஞானிகள் மற்றும் கோடிக்கணக்கான நாட்டு மக்கள் அனைவருமே பாராட்டுகளுக்குத் தகுதியானவர்கள்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் நம்மைப் பெருமையடையச் செய்த வீரர்கள் இன்று நம்முடன் உள்ளனர். அவர்களது சாதனையை நாட்டு மக்கள் இன்று பாராட்ட வேண்டும். அவர்கள் நமது இதயத்தை மட்டும் வெல்லவில்லை. எதிர்கால தலைமுறையினரை சாதிக்கத் தூண்டியு ள்ளனர்.” இந்தியாவை உலகின் பச்சை ஹைட்ரஜன் மையமாக உருவாக்க தேசிய ஹைட்ரஜன் திட்டம் உருவாக்கப்படும். இதன் மூலம், மிகப் பெரிய ஹைட்ரஜன் ஏற்றுமதியாளராக இந்தியா உருவெடுக்கும். துல்லிய தாக்குதல், விமான தாக்குதல் மேற்கொண்டதன் மூலம் புதிய இந்தியா உருவாகியுள்ளதை உலக நாடுகளுக்கு உணர்த்தியுள்ளோம். இந்தியா மாறுதல் அடைந் திருக்கிறது. கடினமான முடிவுகளை இந்தியா எடுக்கும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலக போருக்கு பிறகு சர்வதேச உறவுகளின் தன்மை மாறியது.
நாட்டின் முழுமையான உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.100 லட்சம் கோடியில் விரைவி்ல் பிரதான் மந்திரி கதிசக்தி திட்டம் அறிவிக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் சர்வதேச அளவில்போட்டியிட முடியும், எதிர்கால பொருளாதார மண்டலங்களையும் உருவாக்க முடியும்.
இந்தியா கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் 800 கோடி டாலர் அளவுக்கு செல்போன்களை இறக்குமதி செய்தது, ஆனால், தற்போது 300 கோடி டாலர் அளவுக்கு செல்போன்களை ஏற்றுமதி செய்கிறது. நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன், உள்கட்டமைப்புக்காக முழுமையான அணுகுமுறைஇந்தியாவுக்கு அவசியம். உலகத் தரமான பொருட்களை உற்பத்தி செய்ய நாம் அனைவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். இந்த நாட்டின் பெருமையாக கருதப்படும் 80 சதவீதம் வரை இருக்கும் 2 ஹெக்டேருக்கும் குறைவாக வைத்திருக்கும் சிறு விவசாயிகள் மீது அரசு அதிக அக்கறை கொள்கிறது. அரிசி வழங்கும் எந்தஒரு திட்டமும் 2024ம் ஆண்டுக்குள் பலப்படுத்தப்படும். நம்முடைய கிராமங்களை வேகமாக மாற்றி வருகிறோம். டிஜிட்டல் தொழில்முனைவோர்கள் கிராமங்களிலும் உருவாகிவிட்டனர்.
75-வது சுதந்திரன விழாவை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 75 வந்தே பாரத் ரயில்கள் சேவையை விரிவுபடுத்தப்படும். வடகிழக்கு மாநிலங்களுக்கும் ரயில் சேவை விரைவில் விரிவுபடுத்தப்படும். மியான்மர், வங்கதேசம், தென்கிழக்கு ஆசியப் பகுதிகளுக்கும் ரயில் போக்குவரத்து கிடைக்க வழி செய்யப்படும்.
ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்ன. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பொதுப்பிரிவினர் ஆகியோருக்கான ஒதுக்கீடு வழங்கப்படும். கிராமங்களிலும், நகரங்களிலும் வாழும் மக்களுக்கு இடையிலான இடைவெளி்க்கு பாலம் அமைக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளில் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம், 4.5 கோடிக்கும் அதிகமான புதிய வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலக ஒழங்கு மாறுவதற்கு வாய்ப்புள்ளது. உலக நாடுகளின் முயற்சிகளை கண்டு இந்தியா பாராட்டியுள்ளது. உலக நாடுகள் இந்தியாவை பார்க்கும் விதமும் மாறியுள்ளது. அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று பயங்கரவாதம். இரண்டாவது எல்லைகளை ஆக்கிரமிக்கும் போக்கு. இவ்விரண்டு சவால்களுக்கு எதிராகவும் இந்தியா போரிட்டுவருகிறது. புத்திசாலித்த னமாகவும் துணிச்சலாகவும் பதிலளித்துவருகிறது” இவ்வாறு அவர் உரையாற்றினார் .
எம்.கே. ஷாகுல் ஹமீது