திருச்சி வடக்கு அதிமுக மாவட்ட சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானத்தை மாவட்ட செயலாளர் மு. பரஞ்ஜோதி, மாநில அமைப்பு செயலாளர் எஸ். வளர்மதி ஆகியோர் வழங்கினார்கள்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானத்தை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் மு. பரஞ்ஜோதி, மாநில அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ். வளர்மதி ஆகியோர் வழங்கினார்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள் விழா நேற்று மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி தலைமையில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி திருச்சி சோமரசம்பேட்டை, குழுமணி, ஜீயபுரம், துறையூர் பகளவாடி, உப்பிலியபுரம் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாவட்டச் செயலாளர் மு. பரஞ்ஜோதி, மாநில அமைப்பு செயலாளர் எஸ். வளர்மதி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் ,நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர்கள் ஸ். வளர்மதி, கே.கே. பாலசுப்பிரமணியன் ,
மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், மாவட்ட பொருளாளர் சேவியர், மாவட்ட மீனவர் அணிச் செயலாளர் கண்ணதாசன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், கோப்பு நடராஜ்,முத்துக்கருப்பன், ஆமூர் ஜெயராமன், அழகேசன்,புங்கனூர் ஒன்றிய கவுன்சிலர் இன்ஜினியர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
– ஷாஹுல் ஹமீது