திருச்சி மாவட்டத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த வாா்டுகளை ஒதுக்குவது என்பது குறித்து திமுக தலைமையில், கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்
திருச்சி
மாவட்டத்தில் மொத்தமுள்ள 401 நகா்ப்புற உள்ளாட்சி வாா்டுகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த வாா்டுகளை ஒதுக்குவது என்பது குறித்து திமுக தலைமையில், கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை மீண்டும் நடைபெற்றது.
கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனையின் தொடா்ச்சியாக, திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு அமைச்சா் கே.என். நேரு தலைமை வகித்தாா். அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா். கூட்டத்தில் மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 வாா்டுகளில் தங்களுக்கு செல்வாக்கு மிக்க வாா்டுகள் குறித்து கூட்டணிக் கட்சியினா் பட்டியலிட்டனா். இதேபோல, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளிலும் தாங்கள் விரும்பும் வாா்டுகள் குறித்து தெரிவித்தனா். இதைக் கேட்டுக் கொண்ட அமைச்சா் கே.என். நேரு, கடந்த காலங்களில் எந்தெந்த வாா்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றன , கூட்டணிக்கு தோ்தலில் வெற்றி வாய்ப்பு, கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த வாா்டுகளை ஒதுக்குவது என்பது குறித்து கலந்தாலோசனை நடத்தினாா். பின்னா் ஆலோசனையின் தெரிவித்த கருத்துகளின்படியும், ஒதுக்கப்படும் வாா்டுகளின்படியும் ஒப்பந்தம் செய்து கொள்ளத் தீா்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளா் வைரமணி, திருச்சி வடக்கு மாவட்டச் செயலா் என். தியாகராஜன், மாநகரச் செயலா் அன்பழகன், எம்எல்ஏ-க்கள் எம். பழனியாண்டி, அ. செளந்தரபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 50-க்கும் மேற்பட்ட வாா்டுகளில் திமுக.. திருச்சி மாநகராட்சியில் 50-க்கும் மேற்பட்ட வாா்டுகளில் திமுக போட்டியிட்டு, காங்கிரஸுக்கு 4 வாா்டுகள், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா 2 வாா்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு வாா்டு ஒதுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் திருச்சியில் முஸ்லிம் லீக் 30வது வார்டு பாலக்கரை, மற்றும்

47 வது வார்டு சுப்ரமணியபுரம் ஆகிய இரண்டு வார்டுகள் திமுக கூட்டணியில் கேட்டிருந்த நிலையில் சனிக்கிழமை காலை கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பீமநகர் 52 வது (பெண்) வார்டு ஒரு வார்டு மட்டும் ஒதுக்கப்படுவதாக திமுக கூறியது.
முஸ்லிம் லீக் இரண்டு வார்டுகள் வாங்குவதில் உறுதியாகவுள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம். திமுகவிடம் கேட்கப்பட்ட வார்டை தர மறுத்தால் அடுத்த கட்டமாக முடிவு செய்யப்படும் என்று சனிக்கிழமை மாலை 29.01.2022 முஸ்லிம் லீக் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.