கவிக்கோ அப்துல் ரஹ்மானுக்கு நினைவு மணிமண்டபம் அமைக்க வேண்டும் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வக்ஃப் வாரிய தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் மற்றும் இஸ்லாமிய இலக்கிய கழகத்தினர் நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தல்
சென்னை,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமை செயலகத்தில் 05.10.2021 செவ்வாய் அன்று தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் எம். அப்துர் ரஹ்மான், வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் கே. நவாஸ்கனி எம்.பி. ஷாநவாஸ் எம்.எல்.ஏ., ஆசியா மரியம் ஐ.ஏ.எஸ். டாக்டர் ஹாஜா கே. மஜீத், ஏ.எஸ். பாத்திமா முஸப்பர், எம்.கே.கான், சுஹைல் ஹைதர்கான், செய்யது ரஹ்மான், செய்யது அலி அக்பர் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தமிழ் நாடு வக்ஃப் வாரியத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். அப்துர் ரஹ்மான் கூறியதாவது : நாட்டிலுள்ள எல்லா மாநிலங்களைவிட தமிழகம் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. முதலமைச்சரை நாங்கள் சந்தித்தபோது பாராட்டு தெரிவித்தோம். வக்ஃப் வாரியம் என்பது இறைவனின் பெயரால் அர்ப் பணிக்கப்பட்ட சொத்துக் களை நிர்வாகிக்கும் வாரியம். இதற்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.
வக்ஃப் வாரிய சொத்துக் களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுப்பதும், மோசடியாக விற்பனை செய்வதை கண்டறிந்து மீட்க வேண்டிய மிகப் பெரிய பணிகள், பொறுப்புகள் வக்ஃப் வாரியத்துக்கு உள்ளது. வக்ஃப் வாரியத்திற்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பும், அரசியல் குறுக்கீடு இருக்காது எனவும், அதனைத் தொடர்ந்து, வக்ஃப் வாரிய சொத்துக்கள், நிலங்கள் எல்லாம் மக்களுக்கு முழுமையாக பயன்படும் வகையில் உள்ளதா என்பதை உறுதி செய்ய முதல்வர் வலியுறுத்தினார். எனவே எல்லா வகையிலும் வெளிப்படைத்தன்மையோடு வக்ஃப் வாரிய செயல்பாடு இருக் கும் என உறுதி அளிக்கிறோம்.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டுள்ள சொத்துக் களின் பட்டியலை தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தடையில்லா சான்று ஏற்கெனவே போலியாககூட தயாரிக்கப்பட்டு சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது தடையில்லா சான்று வக்ஃப் வாரிய உயர் அதிகாரிகளின் சட்டப்பூர்வமான ஆய்விற்குப் பிறகு நேரடியாக தரப்பட்டால் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும்; இல்லையெனில் மறுக்கப்பட வேண்டும் என தமிழக அரசு ஆணையாக அறிவித்துள்ளது. இதனை வரவேற்கிறோம்.
வக்ஃப் வாரிய சொத்துக்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆக்கிரமிக்கப்பட்ட, மோசடி செய்யப்பட்ட சொத்துக்களை கணக்கெடுத்து வருகின்றோம். தற்போது வக்ஃப் வாரிய இணையதள விரிவாக்கம் செய்யும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. மிக விரைவில் வக்ஃப் வாரிய சொத்துக்களின் எல்லா தகவல்களும், விவரங்களும் மின்னணு வாயிலாக தெரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு சூழல் உருவாக்கப்படும்.
எல்லாத் தியாகிகளுக்கும் மதிப்பளித்து கொண்டிருக்கும் தமிழக அரசு, கேரள தமிழ்நாடு எல்லையை வகுத்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிய எல்லை போராட்ட தியாகிகளில் தற்போது உயிரோடு இருக்கும் கொடிக்கால் ஷேக் அப்துல்லாவை கௌரவிக்கும் வகையில், நவம்பர் 1 அன்று தமிழக அரசு சார்பாக பாராட்டி பொற்கிழி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். அதேபோல் இஸ்லாமிய இலக்கிய கழகத்தினர், “கவிக்கோ அப்துல் ரஹ்மானுக்கு நூலகம், அருங்காட்சியகம், கூட்ட அரங்கு ஆகியவை அடங்கிய நினைவு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதை முதல்வர் மு.க. ஸ்டாலின் அதற்கான நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
பின்னர் அவரிடம் கேட்டக் கேள்வி:
வக்ஃப் வாரிய சொத்துக் கள் இரண்டாயிரம் கோடி முறைகேடு வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் உள்ளதே…
பதில் : வக்ஃப் வாரிய இரண் டாயிரம் கோடி முறைகேடு வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நடைபெறுகிறது. இதுகுறித்து 6 வாரங்களில் தமிழக அரசு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுபற்றிய முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டும் தகவல்கள் திரட்டப்பட்டு தமிழக வக்ஃப் வாரியம், தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. அதனை தமிழக அரசு முறை யாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக் கும் என்றார்.
மேலும், அவர் கூறிய தாவது :
எல்லா தியாகிகளுக்கும் மதிப்பளித்து கொண்டிருக்கும் தமிழக அரசு, கேரள தமிழ்நாடு எல்லையை வகுத்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிய எல்லை போராட்ட தியாகிகளையும் கௌரவித்துள்ளது. அதேபோல் தற்போது உயிரோடு இருக்கும் கொடிக்கால் ஷேக் அப்துல்லாவை கௌரவிக்கும் வகையில், தமிழக எல்லையை அதிகாரப்பூர்வமாக நிர்ணயம் செய்த நவம்பர் 1 ஆம் தேதி அன்று தமிழக அரசு சார்பாக அவரைப் பாராட்டி பொற்கிழி வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தோம்.
வக்பு வாரிய சொத்துக்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆக்கிரமிக்கப்பட்ட, மோசடி செய்யப்பட்ட சொத்துக்களை கணக்கெடுத்து வருகின்றோம். தற்போது வக்பு வாரிய இணையதள விரிவாக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மிக விரைவில் வக்பு வாரிய சொத்துக்களின் எல்லா தகவல்களும், விவரங்களும் மின்னணு வாயிலாக தெரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு சூழல் உருவாக்கப்படும்.
வக்பு வாரிய சொத்துக்களில் ரூ.2000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள வழக்கு தொடர்பான தகவல்களை தமிழக அரசுக்கு அளித்துள்ளோம். விரைவில் தமிழக அரசு நீதிமன்றத்தில் அது குறித்து தெரிவிக்கும்”.இவ்வாறு எம். அப்துர் ரஹ்மான் கூறினார்.