சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச விழித்திரை கண் பரிசோதனை முகாம்
தொண்டி, அக்.4-
இராமநாதபுரம் மாவட்டம். தொண்டியில் கிழக்கு கடற்கரை சாலையில் பெரிய பள்ளிவாசலை அடுத்துள்ள சமுதாயக்கூடத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக கிழக்கு மாவட்ட மருத்துவ அணி சார்பாக, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையும், இராமநாதபுரம் ஆரோக்கியா மருத்துவமனையும் இணைந்து சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச விழித்திரை கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதில் சர்க்கரை அளவு, கால் நரம்பு பரிசோதனை,கால் இரத்த நாளங்கள் பரிசோதனை, உணவு, உடற்பயிற்சி, மருத்துவ ஆலோசனைகள் டாக்டர். பரணிக்குமார் மற்றும் செவிலியர்களால் வழங்கப்பட்டது. திருவாடானை தாசில்தார் செந்தில்வேல்முருகன்,த.மு.முக மாநில செயலாளர் சாதிக்பாட்சா உட்பட த.மு.மு.க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்