தொண்டி அருகே ஆசியா கண்டத்தில் உள்ள நாடுகள் அதன் தலைநகர் பெயர்களை 1 நிமிடத்தில் சொல்லும் 4 வயது சிறுவன்
தொண்டி, அக்.4-
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே முகிழ்தகம் கிராமம் பெரியகுடியிருப்பைச் சேர்ந்த பாண்டியராஜா, யோக லெட்சுமி தம்பதியரின் மகன் ராகுல். 4 வயதே ஆன இச்சிறுவன் தாெண்டியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப்பள்ளி பள்ளியில் யூ.கே.ஜி படித்து வருகிறான். காெராேனா காலக்கட்டம் என்பதால் ஆசிரியைகளின் அறிவுரையின்படி பாடங்களை படித்து வந்த இச்சிறுவன் வீட்டில் தாயாரின் பயிற்சியால் ஆசியா கண்டத்தில் உள்ள 49 நாடுகள் ஆப்கானிஸ்தான் நாடு அதன் தலைநகர் காபூல் முதல் ஏமன் நாடு அதன் தலைநகரம் ஸனா வரை 49 நாடுகளின் தேசிய காெடிகளைப் பார்த்து நாட்டின் பெயரையும் அதன் தலைநகரத்தையும் ஒரு நிமிடத்தில் அதாவது 60 வினாடிகளில் சொல்லிவிடுகிறான். இதற்கு முன் சென்னை போரூரைச் சேர்ந்த விகாசினி என்ற 4 வயது சிறுமி இதே போல் 49 நாடுகளின் பெயரையும், அதன் தலைநகரின் பெயரை 84 வினாடிகளில் கூறியிருந்தார். அச்சாதனையை முறியடிக்கும் விதமாக தொண்டி அருகே உள்ள முகிழ்தகம் கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் ராகுல் சொல்லியது சாதனையாக கருதப்படுகிறது. அனைவரும் இவனது சாதனையை பாராட்டி வருகின்றனர். சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்