இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
திங்கள்கிழமை – 04/10/2021
நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும். சங்கீதம் 90:12
நமக்கு இந்த உலகத்தில் வாழ்வதற்காய் அளிக்கப்பட்ட காலம் வறையறுக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ம்தேதி மீண்டும் திரும்ப வரப்போவதில்லை. நேரம் என்பது மீட்கப்படமுடியாதது. அப்படி நேரத்தை நம்மால் மாற்றமுடியாது என்றால் நாம்தான் நம்மை மாற்றி அமைத்துக்கொள்ளவேண்டும். 120 வருடம் வாழ்ந்த மோசே நாட்களை எண்ணும் அறிவைத் தாரும் என்று ஜெபித்து; வறையறுக்கப்பட்ட தனது வாழ்நாளில் முக்கியமாக எதை செய்யவேண்டும் என்பதை எங்களுக்கு போதித்தருளும் என்று கேட்கிறார். உங்கள் வாழ்க்கையில், உங்கள் நேரத்தில் எதற்கு எல்லாம் முக்கியத்துவம் உண்டு என்பதை தெரிந்துகொள்ளுங்கள். வாழ்க்கையில் முக்கியத்துவம் எதற்கு அளிக்கவேண்டும் என்று அறியாதவன் தான் தன் நேரத்தை வீணாக செலவழிப்பான் அவன் சோம்பேறி.
அறிக்கை: தேவன் என்னைக்கொண்டு எதை செய்யச் சித்தம் கொண்டுள்ளாரோ அதற்கே என் வாழ்நாளில் முக்கியத்துவம் கொடுப்பேன். என் வாழ்நாட்களை ஜாக்கிரதையாய் செலவழிப்பேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com