கடலாடி யூனியன் வளாகத்தில் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதியநீதிமன்றம் கட்ட அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு;கடலாடி வக்கீல் சங்கத்தினர் கடும்கண்டனம் முதுகுளத்தூர்; அக்: 3
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடிநீதிமன்றமானது மேலக்கடலாடியில் உள்ள சமுதாய கூடத்தில் இயங்கி வருகின்றது.இந்நிலையில் கடலாடி புதிய நீதிமன்றத்திற்கான இடம் தேர்வு குறித்து கடலாடி அரசுக்கல்லூரி அருகில் மூன்று இடத்தினை இராமநாதபுரம் மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் நேரில் சென்று பார்வையிட்டார்.இந்நிலையில் இது குறித்து கடலாடி வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன்,செயலாளர் பூமுருகன்,பொருளாளர் பாண்டி ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது; கடலாடி யூனியன் அலுவலக வளாகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் யூனியன் அலுவலகத்திற்கு புதியதாககட்டிடம் கட்டப்பட்டு இயங்கி வருகின்றது.இந்நிலையில் யூனியன் அலுவலக பழைய கட்டிடத்தோடு சேர்த்து மூன்றை ஏக்கர் உள்ளது.இதில் பழைய யூனியன் அலுவலக கட்டிடடத்தை இடித்துவிட்டு ஒரு ஏக்கர் மட்டும் நீதிமன்றத்திற்கு வழங்கவேண்டும் என கவுன் சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி பலமுறை கூறியும் அதிமுக சேர்மனாக இருபதால் திமுக ஆட்சியில் கட்டிவிட்டால் நமக்கு அரசியல்ரீதியாக மரியாதை போயி விடுமோ என்று நினைத்து தீர்மானம் நிறைவேற்ற மறுத்துவிட்டனர்.கேட்டால் நாங்கள் கம்பிகுடோன்,சிமிண்ட்குடோனுக்கு
பெண்கள் நீதிபதியாக இருபதால் இரவுநேரங்களில் குற்றவாளிகளை ஆஜர் படுத்த வரும்போது பெண்நீதிபதிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும் கடலாடிக்கு அப்பால் சென்றுவிட்டால் வியாபாரரீதியாகவும் பாதிக்கும் என்பது தான் உண்மை. இந்நிலையில் நாங்கள் மாவட்ட உயர்அதிகாரிகளை நேரில் சந்தித்துபேசியபோது கடலாடி அதிமுக சேர்மனும், கடலாடி அதிமுக கவுன்சிலர் இருவரும் தான் கடலாடியின் வளர்ச்சிக்கு அரசியல் உள்நோக்கத்துடன் எதிப்பதாக கூறினார்கள். இது மிகவும் கண்டனத்திற்கு உரியதாகும்.
அப்படி கொடுக்கமறுக்கும் பட்சத்தில் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடுப்போம் என்றனர்.பேட்டியின்போதுஉடன் வழக்கறிஞர் ராமபாண்டியன் உள்பட வழக்கறிஞர்கள் இருந்தனர். கா.வினோத்குமார் முதுகுளத்தூர்