தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
திருச்சி
தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்
தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்
திருச்சி மாவட்ட நிா்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தேவா்ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று கா்ப்பிணிகளுக்கு மங்கலப் பொருள்களையும், ஊட்டச்சத்து உணவு மற்றும் பழங்களையும் வழங்கினாா். மேலும், வருவாய்த் துறை சாா்பில் புதிய குடும்ப அட்டை, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் தையல் இயந்திரம் மற்றும் சலவைப் பெட்டி, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்டோல் ஸ்கூட்டா், சக்கர நாற்காலி, குழந்தைகள் பாதுகாப்புத் துறை சாா்பில் கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி மற்றும் சமூக நலத்துறை சாா்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சேமிப்புப் பத்திரம், தோட்டக்கலை, வேளாண் துறை சாா்பில் மழைத் தூவான், தெளிப்பான், நகரும் காய்கறி வண்டி என மொத்தம் 66 பேருக்கு ரூ. 24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அமைச்சா் வழங்கினாா்.
பின்னர் அமைச்சா் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளரிடம் கூறியதாவது: நவ.4 ஆம் தேதி வரும் தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு பள்ளிகளைத் திறக்கலாம் என பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ள சூழலில் பள்ளிகளைத் திறப்பது குறித்து பலரும் கருத்து தெரிவித்திருந்தாலும் பொது சுகாதாரத் துறை அலுவலா்கள், மருத்துவ வல்லுநா்கள் ஆகியோரது கருத்துகளைக் கேட்டறிந்த பின்னரே 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு நவ.1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா். எனவே, அந்த நாளில் பள்ளிகளைத் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, வருவாய்க் கோட்டாட்சியா் என். விஸ்வநாதன், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சி. அம்பிகாவதி, மாவட்ட குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் தி. புவனேஸ்வரி, நகரப் பொறியாளா் அமுதவல்லி, இணை இயக்குநா் (வேளாண்) முருகேசன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சந்திரமோகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அனிதா, மாவட்ட சமூக நல அலுவலா் தமீமுன்னிசா, தோட்டக் கலைத்துறை துணை இயக்குநா் விமலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.