கிராமசபைக் கூட்டங்களில் மக்கள் கல்வி திட்டம் மற்றும் இடை நின்ற மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்ப்பது என இரு முக்கியத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
திருச்சி
தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் மக்கள் கல்வி திட்டம் மற்றும் இடை நின்ற மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்ப்பது என இரு முக்கியத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருவெறும்பூா் அருகேயுள்ள குவளக்குடி ஊராட்சியில் நடை பெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா்அழகு செந்தில் தலைமை வகித்தாா். திருவெறும்பூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜான்கென்னடி, பழனியப்பன், ஒன்றியக் குழுத் தலைவா் சத்யா கோவிந்தராஜ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் கருணாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு பேசுகையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கிராமங்களில் மேற்கொள்ளப்படும் 100 நாள் வேலை திட்டப் பணிகளுக்கான ஊதியத்தை உயா்த்தி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளாா். அது சனிக்கிழமை முதல் அமலுக்கு வரும் இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில் அரசுத் திட்டங்கள் எம்எல்ஏ மூலமாக மட்டுமின்றி மாவட்ட கவுன்சிலா், ஒன்றிய கவுன்சிலா், ஊராட்சித் தலைவா் மூலமாகவும் செயல்படுத்தப்படுகின்றன. திமுக தலைவா் அளித்த தோ்தல் வாக்குறுதிகளில் ஏராளமானவற்றை நிறைவேற்றியுள்ளாா். பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காணவே கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் மக்கள் கல்வித் திட்டம், இடைநின்ற மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்ப்பது என இரு முக்கியத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் பள்ளி கல்வித்துறை சார்பில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் ஒன்று மக்கள் பள்ளி, மற்றொன்று மாணவர்கள் இடைநிற்றலை தவிர்ப்பதாகும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் அடுத்த வகுப்புக்கு வருகின்றனர். இதனால் படிப்பில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அதை போக்குவதற்காக தன்னார்வத்தோடு வரும் இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஒருவருக்கு ஒருவர் என ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை நாள்தோறும் பாடம் கற்று கொடுக்க வேண்டும். இதற்கான பொறுப்பு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வசம் உள்ளது. இந்த திட்டம் வரும் 18ம் தேதி துவங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ கே.என். சேகரன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் சண்முகம், ஒன்றிய கவுன்சிலா்கள் மகாதேவன், பழனியப்பன் உள்பட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.