தேவாதூர் ஊராட்சியில் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த நேரத்தை தெரிந்துகொள்ள மணிக்கூண்டு அமைக்க வாக்குறுதி.
மதுராந்தகம் வட்டம்,
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேவாதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு டி.குமார், பூட்டுசாவி சின்னத்தில் போட்டியிடுகிறார். வரும் 9.10.2021,ம் தேதி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தனக்கு வாக்குகள் சேகரிக்க தேவாதூர் ஊராட்சிக்குட்பட்ட விநாயகர் கோவில் தெரு, நடுதெரு, எம்ஜிஆர் நகர், அம்பேத்கர் நகர், இருளர் குடியிருப்பு பகுதி, ஜெய்பீம்நகர், உள்ளிட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பேசும்போது தேவாதூர் ஊராட்சியில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த நேரத்தை தெரிந்து கொள்ளும் மணிக்கூண்டு அமைக்கப்படும் உயர்மின் கோபுர மின்விளக்குகள் அமைப்பது குறிப்பாக தேவாதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் நிறைகுறைகளை கண்டறிய ஊராட்சி அலுவலக நேரம் முழுமையாக செயல்படும் என தனக்கு ஒதுக்கப்பட்ட வெற்றியின் சின்னமான பூட்டுசாவி சின்னத்திற்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொண்டார். மேலும் தனது தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றி தரப்படும் எனக்கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த பொது மக்கள் ஆரவாரத்துடன் ஆரத்தி எடுத்து மலர்மாலை அணிவித்து வெற்றி வேட்பாளர் டி.குமாரை வரவேற்றனர். மதுராந்தகம் செய்தியாளர் ராஜசேகர்.