பொதுமக்களுக்கு குடிநீர் பஞ்சம் தீர்க்கும் டேங்கர் ஆப்பரேட்டர்களுக்கு தனிநபர் காப்பீடு ஏற்படுத்தித் தர வாக்குறுதி.
மதுராந்தகம் ,
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மின்னல்சித்தாமூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வழக்கறிஞர் பாலாஜி, பூட்டுசாவி சின்னத்தில் போட்டியிடுகிறார்.
வரும் அக்டோபர் 9.10.2021,ம் தேதி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தனக்கு வாக்குகள் சேகரிக்க மின்னல்சித்தாமூர், மின்னல் கீழ்மின்னல், கீழ்பட்டு, உள்ளிட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பேசும்போது தனக்கு ஒதுக்கப்பட்ட பூட்டுசாவி சின்னத்திற்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொண்டார். அப்போது பெருமக்களிடம் கூறுகையில் பொதுமக்கள் குடிநீர் பஞ்சம் தீர்க்கும் ஆப்பரேட்டர்களுக்கு தனி நபர் காப்பீடு வசதி செய்து தரப்படும்,.
டேங்க் ஆபரேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பிங் பழுதுபார்க்கும் அதிநவீன கருவிகள் வழங்கப்படும், நமது ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குடிநீர் வசதிகள் மேற்கொள்ள அனைத்து டேங்க் ஆப்பரேட்டர் களுக்கும் தலா ஒரு மிதிவண்டி வழங்கப்படும், மேலும் லஞ்ச லாவண்யத்தை ஒழித்து ஊழல் இல்லாத நல்லாட்சியை அமைப்பேன் என தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படும் எனக்கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த பொது மக்கள் ஆரவாரத்துடன் பூமாலை அணிவித்து ஆரத்தி எடுத்து பூட்டு சாவி சின்னத்தின் வேட்பாளர் வழக்கறிர் பாலாஜியை வரவேற்றனர். மதுராந்தகம் செய்தியாளர் ராஜசேகர்.