கமுதி கல்லூரி பேராசிரியருக்கு நட்சத்திர விருது
முதுகுளத்தூர் : அக்: 3
சென்னையில் பநீ ருத்ராட்சா கலை & நடன பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா நடைபெற்றது இவ்விழாவில் பல்வேறு துறையில் சிறந்து விழங்கும் சாதனையாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கமுதி,பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றும் முனைவர்.போ. பால் பாண்டியன் அவர்களுக்கு சர்வதேச நட்சத்திர விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவர் அரசியல் கல்லூரியில் கடந்த ஏழ ஆண்டுகளாகவும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலராக நான்கு ஆண்டுகளாகவும் பணியாற்றிவருகிறார். பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஏழை எளிய மாணவர்கள் கல்வி கற்ற உதவி செய்தல் மற்றும் பள்ளி கல்லூரிகளில் மரக் கன்றுகள் வைத்து பராமரித்து வருகிறார்.கொரொனா காலகட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை பல்வேறு அமைப்புகளின் துணையோடு ஏற்பாடு செய்து சமூக விழிப்புணர்வு செயற்பாட்டாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சினிமா துறையை சேர்ந்த சண்டை பயிற்சியாளர் “கலைமாமணி” ஜக்குவார் தங்கம்,”மைம்”கோபிநாதன் ,”சேவாரத்னா” செல்வநாதன்,காவல் துறை அதிகாரி, வழக்கறிஞர்கள் அகமத் பாஷில் , மரு.பத்மபிரியா பல்கலைக்கழக நிறுவனர் “கலைமணி” AMB.அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டு விருதினை வழங்கி சிறப்பித்தனர்.
கா. வினோத்குமார் முதுகுளத்தூர்