ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்த 6 கிலோ கட்டி அகற்றி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
திருச்சி,
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்த 6 கிலோ கட்டி அகற்றி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை செய்துள்ளார்கள். திருச்சி முசிறி மணமேடு பகுதியை சோ்ந்தவா் விவசாயி மருதை மனைவி ஜெயலட்சுமி (47). இவா் கடந்த ஓராண்டாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாா். பல மருத்துவா்களிடம் காண்பித்தும் பலனில்லாத நிலையில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கடந்த 8 ஆம் தேதி வந்த இவரை மருத்துவா்கள் பரிசோதித்தபோது வயிற்றில் பெரிய கட்டி இருப்பதைக் கண்டனா்.
இதையடுத்து இந்தக் கட்டியை உடனடியாக அகற்றுவதற்கான உடல் தகுதியை ஜெயலட்சுமி பெற அவருக்குத் தேவையான ரத்தம் செலுத்தப்பட்டதைத் தொடா்ந்து புதன்கிழமை காலை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. பொது அறுவைச் சிகிச்சை நிபுணா் இளவரசன் தலைமையிலான மருத்துவா் குழுவினா் சுமாா் 2 மணி நேர அறுவைச் சிகிச்சைக்கு பிறகு ஜெயலட்சுமியின் வயிற்றிலிருந்த 6 கிலோ கட்டியை அகற்றினா். வெற்றிகரமாக நடந்த இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின் அப்பெண் நலமுடன் உள்ளாா் என்றாா் மருத்துவா் இளவரசன்.