இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
புதன்கிழமை – 22/09/2021
பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படியிருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான். நீதிமொழிகள் 10:26.
சோம்பேறி பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படியிருக்கிறதோ, அப்படியே இருப்பானாம். சோம்பேறியின் நோக்கங்கள் எல்லாம் சிறப்பாயிருக்கும். ஆனால் அதை அவன் செய்வது தான் கிடையாது. எப்போது செய்யப்போகிறான் என்றால் நாளைக்கு என்பான். பெரிய திட்டங்கள் எல்லாம் அவனுக்கு இருக்கும். ஆனால் அதை அவன் நிறைவெற்றுவதே கிடையாது. எதையாவது ஒன்றை அவன் ஆரம்பித்தால் அதை அவன் முடிப்பதும் கிடையாது. எல்லாவற்றையும் நாளைக்கு செய்துவிடலாம் என்று தள்ளிப்போடுபவனே சோம்பேறி. நீங்கள் அப்படிப்பட்டவராயிருந்தால் உங்களை சோம்பேறி என்று ஞானி கூறுகிறார்.
அறிக்கை:நான் இன்று செய்ய வேண்டிய காரியங்களை இன்றே செய்து முடிப்பேன்.என்னுடைய திட்டங்களையும் பணிகறையும் உடனே செய்து முடிப்பேன். நான் எதையும் ஆரம்பித்து அதை முடிப்பதற்கான பெலனை என் தேவன் எனக்குத்தருவார் . ஆமென்
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com