இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
செவ்வாய்க்கிழமை – 21/09/2021
ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்; சோம்பேறியோ பகுதிகட்டுவான். நீதிமொழிகள் 12:24.
வேலைசெய்ய மனதில்லாதவர்கள் ஆவிக்குறிய நிலைமையிலும் வளருவதில்லை. கர்த்தருடைய வார்த்தையைக் கேட்பதற்கும் வாசிப்பதற்கும் தியானிப்பதற்கும் அவர்கள் செயல்படுவதில்லை. ஆவிக்குறிய நிலைமையிலும் முன்னேறாததினால் உலக வாழ்க்கையிலும் அவர்கள் வளருவதில்லை. சோம்பேறிக்கு வாழக்கையில் எதற்கெல்லாம் முக்கயத்துவம் கொடுப்பதென்றே தெரியாது. அவன் தனது நாட்களை திட்டமிடுவதில்லை. எந்தெந்த நாளில் எதை செய்யவேண்டும் எந்தெந்த நாளில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று திட்டமிட மாட்டான். எந்தெந்த நாளில் எதை செய்யவேண்டும். எந்தெந்த நாளில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று திட்டமிடாதவன் சோம்பேறி. இவனிடத்தில் அதிகாரத்தை யாருமே கொடுப்பதில்லை.
அறிக்கை: வேலைசெய்ய மனதுள்ளவனாய் நான் இருப்பேன். நான் செய்வது எல்லாம் வாய்க்கும். எனக்கு எதிராய் எழும்பும் எந்த ஆயுதமும் வாய்க்காது போம். ஆமென்
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com