இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
திங்கள்கிழமை – 20/09/2021
ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்; சோம்பேறியோ பகுதிகட்டுவான். நீதிமொழிகள் 12:24.
வேலை செய்ய மனதுள்ளவன் எப்பொழுதும் உயர்த்தப்பட்டுக்கொண்டே இருப்பான். சோம்பேறியாய் இருப்பவன் பகுதி கட்டுவான் என்பது பலவந்தப்படுத்தப்பட்டு வேலை செய்ய கண்டிக்கப்படுவான் என்று அர்த்தம். சோம்பேறியாக இருப்பவன் உயர்ந்த அதிகாரியாக மாறுவதே இல்லை. வேலை செய்யுமிடத்தில் எப்பொழுதுமே தாழ்வான ஸ்தானத்தில் இருப்பவன் சோம்பேறி. வேலைசெய்ய மனதுள்ளவன்தான் உயர்ந்து செல்லமுடியும். வேலைசெய்ய மனதுள்ளவன்தான் ஆவிக்குறிய காரியத்திலும் உயர்ந்து செல்வதால் அவனது நடைமுறை வாழ்க்கையிலும் உயருவான்.
அறிக்கை: வேலைசெய்ய மனதுள்ளவனாய் நான் இருப்பேன். நான் செய்வது எல்லாம் வாய்க்கும். எனக்கு எதிராய் எழும்பும் எந்த ஆயுதமும் வாய்க்காது போம். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com