தமிழக அரசின் உத்தரவுப்படி திருச்சி மாவட்ட அரசு அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
திருச்சி,
தமிழக அரசின் உத்தரவுப்படி திருச்சி மாவட்ட அரசு அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை சமூக நீதி நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்தநாளான செப்.17-ஐ சமூக நீதி நாளாகக் கடைப்பிடிக்கவும், அன்றைய தினத்தில் அரசு அலுவலகங்களில் உறுதியேற்கவும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இதையடுத்து ஆட்சியரகக் கூட்டரங்கில், பெரியாா் ஈ.வெ.ரா. படத்துக்கு மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலைமையில் மாலை அணிவித்தனா். தொடா்ந்து, ஆட்சியா் உறுதிமொழியை வாசிக்க, அதை அனைத்து துறை அலுவலா்கள், பணியாளா்கள் ஏற்றனா்.நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஜெயப்பிரித்தா, அலுவலக மேலாளா்கள் சிவசுப்பிரமணியம் பிள்ளை, தமிழ்கனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரஹ்மான் தலைமையில், செயற்பொறியாளா் ஜி. குமரசேன், உதவி ஆணையா்கள் சண்முகம், பிரபாகரன், திருஞானம் மற்றும் அனைத்துப் பிரிவு அலுவலா்கள், பணியாளா்கள் உறுதியேற்றனா். மாநகரக் காவல் ஆணையரகத்தில் ஆணையா் அருண் தலைமையில், துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்கள் உறுதியேற்றனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பா. மூா்த்தி தலைமையில் உறுதியேற்றனா்.