பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் நினைவு இல்லத்தில் தொழிலதிபர் ஆர்.வி.ரஞ்சித் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு தொழிலதிபரும், மனித நேயருமான முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.
மேலும் அறிஞர் அண்ணா தெருவில் அமைந்துள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியின் மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கினார்.
அப்போது அவருடன் கழக நிர்வாகிகள் டில்லி பாபுபாபு, முன்னா, கார்த்திக், ஐயப்பன், தாஸ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
செய்தி: பாபி.