தனியார்கோழிப் பண்ணையில் கோழி தீவனத்திற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 115 ரேஷன் அரிசி மூட்டை பறிமுதல்.
மதுராந்தகம்,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மாரிபுத்தூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான அன்சர்புட், கோழிப் பண்ணை இயங்கி வருகிறது. இந்த கோழி பண்ணையில் ரேஷன் அரிசியை வேகவைத்து கோழிகளுக்கு தீவனமாக பயன்படுத்துவதாக காஞ்சிபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் ஏ.டி.ஜி.பி ஆபாஸ்குமார், ஸ்டாலின் டிஎஸ்பி ஜான்சுந்தர், ஆகியோரின் உத்தரவின்பேரில் கோழிப்பண்ணைக்கு சென்ற குற்றப்புலனாய்வு போலீசார் கோழி பண்ணையில் சோதனைசெய்தனர். அந்த சோதனை கோழி தீவனத்திற்காக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5750 கிலோ, அதாவது 50 கிலோ எடை கொண்ட 115 மூட்டைகள் பறிமுதல் செய்தனர். அதை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கோழிப் பண்ணையின் உரிமையாளர் மதுராந்தகம் அப்துல்சமத் என்பவரை குற்றப் புலனாய்வு போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.