உத்திரமேரூர் பகுதியில் 100 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் தமிழக அரசின் உத்தரவையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நேரடிப்பார்வையில் உத்திரமேரூர் தாலுகா மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட 100 மையங்களில் மெகா கோரோணா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் துவக்கிவைத்தார் இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, காத்திருந்து தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர்.
மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் பாபு, உத்திரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் லதா ஆகியோர் முகாம் நடைபெறும் இடங்களை ஆய்வுகள் செய்தனர்.
இதில் வட்டார கல்வி அலுவலர் சேசாஸ்த்திரி, திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.நாகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கோபாலகிருஷ்ணன், முன்னால் பேரூராட்சி தலைவர் சுமதி குணசேகரன், ஆசிரியர் வரகுண பாண்டியன், உத்திரமேரூர் அனைத்து வியாபாரிகள் சங்க செயளலர் விவேகானந்தன் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், சேவாலையா தொண்டு நிறுவன பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி: பாபி