இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
சனிக்கிழமை – 11/09/2021
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. எபேசியர் 3:11.
கிருபையின் காலமாகிய சபையின் காலம் ரகசியமானது. சபை என்று ஒன்று உருவாகும் முன்னே அது ஆதி காலத்திலிருந்து மறைக்கப்பட்ட ரகசியமாக இருந்தது. சாத்தான் மனிதனை வஞ்சித்து உலகின் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டான். அவனைத் தோற்கடிக்க மனிதனுக்கு அதிகாரத்தை அளித்து மனிதனைக்கொண்டே சாத்தானை விரட்ட தேவன் வைத்திருந்த திட்டம் சபை. கிறிஸ்துவைப்போன்ற நூற்றிருபது பேர் பெந்தேகோஸ்தே நாளில் உருவாக்கப்பட்டது சாத்தானுக்கு பேரிடியாக இருந்தது. அன்றையதினமே அந்த தொகை மூவாயிரத்து நூற்றிருபது ஆனது. சில நாட்களில் எண்ணாயிரத்து நூற்றிருபதாயிற்து. சபை என்று ஒன்று தோன்றும் என்பது பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளுக்கு கூட வெளிப்படுத்தப்படாத ரகசியம். சபையின் ரகசியத்தை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும். பாதாளத்தின் வாசல்கள் சபையை மேற்கொள்வதில்லை என்று இயேசு சொன்னார். அந்த சபையில்தான் நீங்கள் அங்கமாக இருக்கிறீர்கள். பாதாளத்தின் வாசல் உங்களையும் மேற்கொள்வதில்லை.
அறிக்கை:
நான் கிறிஸ்துவின் சபையில் அங்கமாயிருக்கிறேன. சாத்தானுக்கு என்மேல் அதிகாரம் இல்லை. ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com