இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
வெள்ளிக்கிழமை – 27/08/2021
எபேசியர் 1:3. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.
மற்றவர்களுக்காக நாம் ஜெபிக்கும்போது ஆண்டவரே அந்த சகோதரனை ஆசீர்வதியும், அந்த சகோதரியை ஆசீர்வதியும் என்று ஜெபிக்கிறோம். ஆனால் வேத வசனமோ தேவன் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார் என்று கூறுகிறது. அப்படியென்றால் அந்த ஆசீர்வாதங்களை அந்த குறிப்பிட்ட சகோதரனோ அல்லது நீங்களோ பெற்றுக்கொள்ளாததற்கு காரணம் என்ன? அந்த ஆசீர்வாதங்களைக் குறித்து அறியாததும், அதை பெற்றுக்கொள்வதற்கான கர்த்தருடைய வழிமுறைகளை அறியாததுமே காரணமாகும். ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வதற்கான வழிகளை விளக்குவது தான் பரிசுத்த வேதாகமம். மேற்கண்ட வசனத்தில் ஆசீர்வதித்திருக்கிறார் என்று இறந்த காலத்தில் சொல்லப்பட்டிருப்தையும் மேலும் “சகல” என்ற வார்த்தையையும் கவனியுங்கள். உங்களுக்குத் தேவையான அனைத்து ஆசீர்வாதங்களுக்குமான எல்லாவற்றையும் தேவன் நிறைவேற்றி விட்டார்.
அறிக்கை:
உன்னதங்களிலே சகல ஆவிக்குரிய ஆசீர்வாதத்தினாலும் தேவன் என்னை ஆசீர்வதித்திருக்கிறார். அவரைக்குறித்து அறிகிறஅறிவினால் ஆசீர்வாதங்களை நான் பெற்றுக்கொள்வேன்.ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com