தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் வீட்டுமனை, வீடு ஒதுக்கீடு பெற்று முழுத் தொகையை செலுத்தியோருக்கு விற்பனைப் பத்திரத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு வழங்கினார்
திருச்சி,
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் வீட்டுமனை, வீடு ஒதுக்கீடு பெற்று முழுத் தொகையை செலுத்தியோருக்கு விற்பனைப் பத்திரத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு வழங்கினார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் திருச்சி பிரிவிற்குட்பட்ட புதுக்கோட்டை, கரூா், திருச்சி, அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டப் பகுதிகளில் மொத்தக் கொள்முதல் அடிப்படையில் முழு தொகையையும் ஒரே தவணையில் செலுத்தியோருக்கு உடனடி கிரயப்பத்திரம் வழங்கும் நிகழ்வு 3 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
இத்திட்டத்தில், வீட்டுமனை, வீடு ஒதுக்கீடு பெற்று முழுத் தொகையையும் செலுத்தியுள்ளோா் அதற்கான அசல் ஆவணங்களுடன் திருச்சி வீட்டு வசதிப் பிரிவு அலுவலகத்தை நேரில் அணுகி கிரயப்பத்திரம் பெற்றுக் கொள்ளலாம்.
திருச்சி வீட்டுவசதிப் பிரிவு அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு விற்பனை பத்திரங்களை வழங்கினாா். நேற்று மட்டும் திருச்சி நவல்பட்டு, கரூா் திட்டங்களில் பயன்பெற்ற 65 பேருக்கு விற்பனைப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.
இதன் தொடா்ச்சியாக, திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் ஒதுக்கீடு பெற்ற 257 பேருக்கு பத்திரங்கள் வழங்கப்பட உள்ளதாகவும், இத்தகவல் தொடா்புடையோருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளா் இரா. மனோகரன் தெரிவித்தாா்.
திருச்சியில் நவல்பட்டு திட்டத்தில் வீடு, மனைகள், கரூா் காந்தி கிராமத்தில் நலிவடைந் தோருக்கு வழங்கப்பட்ட மனைகள், அரியலூா் குரும்பஞ்சாவடியில் சுயநிதித் திட்டத்தின் கீழ் ஒதுக்கிய வீடுகள், புதுகை ராஜகோபாலபுரம், பூங்காநகரில் ஒதுக்கப்பட்ட வீடுகள், மனைகள் ஆகியவற்றுக்கு கடந்த 4 ஆண்டுகளாக விற்பனைப் பத்திரம் கிடைக்காமல் இருந்த பலருக்கும் இந்த சிறப்பு முகாம் மூலம் விற்பனை பத்திரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதற்காக உத்தரவிட்ட தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு மற்றும் வீட்டு வசதி வாரிய பிரிவு நிா்வாகத்தினருக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்தனா்.