திருச்சிக்கு 22 ஆம் தேதி வருகை தரும் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொது செயலாளர் என்.புஸ்ஸி ஆனந்த்திற்கு கருப்பு கொடி காட்டுவோம் மாவட்ட நிா்வாகிகள் மன்ற மாவட்ட நிா்வாகிகள் கூட்டாக அறிவிப்பு
திருச்சி,
திருச்சிக்கு 22 ஆம் தேதி வருகை தரும் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொது செயலாளர் என்.புஸ்ஸி ஆனந்த்திற்கு கருப்பு கொடி காட்டி காட்டுவோம் என்று மன்ற மாவட்ட நிா்வாகிகள் கூட்டாக தெரிவித்தார்கள்.
இதுகுறித்து திருச்சி பிரஸ் கிளப்பில் இயக்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் துறையூா் சிவா, தொட்டியம் பாரதிராஜா, மண்ணச்சநல்லுாா் சுரேஷ், கலை, புத்துாா் நடராஜ், சரண்ராஜ், புள்ளம்பாடி ஆண்டனி, திருவெறும்பூா் பாரதி, மணப்பாறை மணிகண்டன், நடேஷ்குமாா், மணிகண்டம் புஷ்பராஜ் ஆகியோா் கூறியதாவது: நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக திருச்சி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம், திருச்சி மாவட்ட தலைமை நிர்வாகிகளாகவும், மற்றும் ஒன்றிய, நகர, பகுதி, கிளை மன்ற நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்தோம்,
14-06-2021 அன்று திருச்சி ஒருகிணைந்த மாவட்ட தலைவர் ஆர்.கே. ராஜா, அவர்களை மாநில பொறுப்பாளராகிய புஸ்ஸி என்.ஆனந்த் அவர்களின் இயக்கத்தில் இருந்து நீக்கினார். அன்றிலிருந்து இன்று வரை திருச்சி மாவட்ட முழுவதும் இருந்த நகர ஒன்றிய தலைமை நிர்வாகிகளை மாவட்டத்தில் உள்ள மக்கள் இயக்க நிர்வாகிகளையும் அன்று மாநில பொறுப்பாளராக இருந்த புஸ்ஸி ஆனந்த் புறக்கணித்தனர்.
பின்னர் சில மாதங்களிலே திருச்சி மாவட்டம் 11-பிரிவாக பிரித்து பதவி வழங்கப்பட்டது. அதிலும் எங்களுக்கு எந்த வித அங்கிகாரம் வழங்கபடவில்லை. நாங்கள் குழுவாகவும், தனியாகவும் தலைமை இடத்திற்கும் தகவல் தெரிவிக்க முயன்றும் எந்தவித பயனும் இல்லை. எனவே தற்போது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் தளபதி விஜய் அவர்கள் பெயரில் ரசிகனாகவும், கிளை இயக்க பதிவு எண் கொண்டும் மக்கள் நல பணி செய்ய கூடாது என தொடர்ந்து வற்புறுத்துகிறார்கள். தொடர்ந்து நாங்கள் தளபதி விஜய் அவர்களின் பெயர் பயன்படுத்தினால் மாநில பொறுப்பாளர் தூண்டுதல் பெயரில் காவல் நிலையத்தில் எங்களது மீது புகார் கொடுத்து,விஜய் அவர்கள் பெயரில் எந்த நலத்திட்டமும் செய்யமாட்டேன் என எழுதி கொடுக்கும் படி நிர்பந்திக்கிறார்கள். இந்த அநியாயத்தை உலகறிய செய்யும் பொருட்டு நாங்கள் பத்திர்க்கை நண்பர்களை நம்பியுள்ளோம். தளபதி விஜய் தலைவர் (விஜய் மக்கள் இயக்கம்) அவரிடம் உண்மை நிலை எடுத்து செல்லவும். எங்கள் நடந்த இந்த துயர நிலையை எடுத்துரைக்கவும் மட்டுமே, நாங்கள் ஒன்று சேர்ந்து இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறோம்.
திருச்சியில் வரும் வாரம் விழா நடைபெறுகிறது என கேள்விபட்டோம் அதற்க்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, விழாவிற்க்கும் வரும் மாநில பொது செயலாளர் என்.புஸ்ஸி ஆனந்த் அவருக்கு எதிர்ப்பும் எங்கள் கண்டனத்தையும் தெரிவிக்கிறோம். இந்த பத்திரிக் கையாளர் சந்திப்பு முழுவதும் தளபதி விஜய் அவர்களுக்கு, எங்களுக்கு ஏற்பட்ட அநீதியை மட்டுமே தெரிவிக்கும் பொருட்டு இந்த சந்திப்பு நடைபெறுகிறது.தளபதி விஜய் அவர்கள் திரை உலகில் காலடி எடுத்து வைத்தது முதல் அவரது ரசிகர்களாக இருந்து நற்பணி ஆற்றி வருபவர்களை விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கிவிட்டு கடந்த 5அல்லது 6 வருடங்களாக உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு இன்று மாவட்ட அளவிலான பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இது தளபதி விஜய்யின் வளர்ச்சிக்காக அல்லது வீழ்ச்சிக்கா. இது அவரது பிஸியான நேரத்தில் அவரது கவனத்திற்கு கொண்டு செல்ல படுகிறதா என தெரியவில்லை. தற்போது விஜய் பெயரில் மக்கள் நலப்பணிகள் செய்யக் கூடாது, மீறி ஈடுபட்டால் காவல்துறையிடம் புகாா் அளிக்கப்படும் என்று மிரட்டுகின்றனா். எனவே, திருச்சிக்கு வரும் 22 ஆம் தேதி வரும் புஸ்சி ஆனந்துக்கு கருப்பு கொடி காட்டி எங்கள் எதிா்ப்பைப் பதிவு செய்வோம் எனத் தெரிவித்தனா்.
திருச்சியில் மட்டுமல்ல அனைத்து மாவட்டங்களிலும் முக்கியமான சீனியர் நிர்வாகிகளை இயக்கத்தின் வளர்ச்சிக்காக உண்மையாக உழைப்பவர்களை நீக்கிவிட்டு பதவி பணத்திற்காக உள்ளவர்களை முக்கிய பொறுப்பாளர்களாக நியமித்து இருப்பது வேதனை யானது இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.