இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
சனிக்கிழமை – 07/08/2021
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். பிலிப்பியர் 3:14
Have a goal and the goal will make you
இலக்கை வையுங்கள் இலக்கு உங்களை உருவாக்கும்
இலக்கு என்றால் எந்தகாரியத்தை எவ்வளவு காலத்துக்குள் நீங்கள் செய்யப்போகிறீர்கள் என்பதைக்காட்டுவது. இலக்கு இல்லாத வாழ்ககை உணர்ச்சியற்ற வாழ்க்கை. Goal இல்லாமல் பந்து விளையாடுகிறார்கள் என்றால் யாராவது அதைப் பாரக்க வருவார்களா? Goal இல்லையென்றால் எந்த அணியாவது விளையாடத்தான் வருமா?
இந்தவருடத்துக்குள், அடுத்த வருடத்துக்குள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதற்கு இலக்கு வையுங்கள் அதை அடைய முயற்சி செய்யுங்கள்.
அறிக்கை:
என் வாழக்கையில் எனக்கு இலக்கு உண்டு. அதைத்தொடருவேன். அதை அடைவேன். எனவே என் வாழ்க்கை உணர்ச்சியுள்ள ஒருவாழ்க்கையாக இருக்கும். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com