துபாயில் இறந்த மகனின் உடலை இந்தியா கொண்டு வர வேண்டி தந்தை கோரிக்கை.
இராமநாதபுரம், அக்,6-
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துபாயில் இறந்த மகனின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அவரது தந்தை கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். இராமநாதபுரம் அருகே உள்ள எம் எஸ் கே நகரில் வசிப்பவர் சேகர் (50) இவருடைய மகன் தமிழ்செல்வன் பட்டதாரியான இவர் துபாயில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 5 ந்தேதி அவர் இறந்து விட்டார் என தகவல் வந்துள்ளது. இதனையடுத்து தனது மகனின் உடலை இந்தியா கொண்டு வர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மனு அளித்துள்ளார். சோமசுந்தரம்