அச்சிறுபாக்கம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா.
செங்கல்பட்டு ஆக.2,
மதுராந்தகம் அடுத்த அச்சிறுபாக்கம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் ரோட்டரி சங்க புதியஅலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் 2021,ம் ஆண்டின் தலைவராக கே.பாபு, செயலாளராக எஸ்.ராமமூர்த்தி, பொருளாளராக டாக்டர்
இ.ஜாகிர்உசேன், ஆகியோருக்கு ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் நிர்மல்ராகவன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும் கடந்த கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள போது அச்சிறுபாக்கம் ரோட்டரி சங்கம் சார்பில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் முக கவசம், கிருமிநாசினி வழங்கினர்.
இவ்விழாவில் மாவட்டத்திலுள்ள மறைமலை நகர் காஞ்சிபுரம் மாமண்டூர் மதுராந்தகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சங்கங்கள் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட பருக்கல், இந்தலூர், தண்டலம், மற்றும் அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளான ஜின்னாநகர், நேரு நகர், பகுதியில் அங்கன்வாடி மையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்திய சேவைகளை தெரிவித்தனர். இந்த விழாவில் மாவட்ட ஆலோசகர்கள் கணேசன், மோதிலால் மற்றும் துணை ஆளுநர் சண்முகசுந்தரம் துணை ஆளுநர் நா.பாலாஜி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் இந்த விழாவில் ரோட்டரி சங்க இயக்குநர்கள் எஸ்.அப்துல்ரசாக், மின்னல்ஸ்ரீதர், முன்னாள் தலைவர் எஸ்.சாய்முருகன், முன்னாள் செயலாளர் வேணுகோபால், பொருளாளர் ரவீந்திரன், உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இராஜசேகர்