திருச்சி மாவட்டத்தில் விரைவில் தேசிய அளவிலான கையுந்து பந்து போட்டிகள்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்
திருச்சி, ஆகஸ்ட்.01-
மாவட்ட கையுந்துப்பந்து கழகத்தின் சார்பில் திருச்சி மாவட்ட கையுந்து பந்துகழகத்தின் தலைமை புரவலரும் தமிழ்நாடு மாநில கையுந்து பந்து கழகத்தின் புரவலரும், தமிழக பள்ளிக்கல்வித் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி க்கு பாராட்டு விழா திருச்சி மாவட்ட கையுந்து பந்து கழகத்தின் தலைவர் முனைவர் தங்க பிச்சையப்பா தலைமையில் திருச்சி மாவட்ட கையுந்து பந்து கழகத்தின் செயலாளர் கோவிந்தராஜன் ஏற்பாட்டின் பேரில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் திருச்சி மாவட்ட கையுந்து பந்து கழக நிர்வாகிகள் விளையாட்டு வீரர்கள் உடற்கல்வி இயக்குனர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.
விழாவில் அமைச்சர் திருச்சி மாவட்டத்தில் கையுந்து பந்து விளையாட்டு மட்டுமல்லாமல் அனைத்து விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் அளித்து அதன் வளர்ச்சிக்காக விளையாட்டுத்துறை அமைச்சர் ஓடு கலந்து ஆலோசித்து அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.மேலும் திருச்சி மாவட்டத்தில் மிக விரைவில் தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகள் நடத்தப்படும் என பேசினார். ஆனந்தன்