காளையர் கோவில் இந்தியன் வங்கியில் பள்ளி மாணவிக்கு வங்கி கணக்கு துவங்க மறுத்தனர். இதனால் தாய் மற்றும் பள்ளி மாணவி வங்கி வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
ஊரடங்கு தளர்வு காரணமாக பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள மறவமங்கலம் ஊரைச் சேர்ந்த போதுராஜா மனைவி கீதா விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் மகள் சந்தான செல்வி அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகின்றனர்.
அரசின் திட்டங்கள் நேரடியாக வங்கி கணக்கு வருவதற்கு ஏதுவாக தலைமை ஆசிரியர் மாணவி பெயரில் வங்கி கணக்கு துவங்க வேண்டும் என அறிவுறுத்தலின் பெயரில் தாயார் கீதா கடந்த 10 தினங்களாக காளையார்கோவில் உள்ள தான் 10 ஆண்டுகளாக கணக்கு வைத்து வாடிக்கையாளராக இருக்கும் இந்தியன் வங்கிக்கு தனது மகளுக்கு கணக்கு துவங்க வேண்டும் என தெரிவித்தபோது உதவி மேலாளர் இவர்களை அலைக்கழித்து வந்ததாக தெரிகிறது. பள்ளியில் தலைமை ஆசிரியர் கணினியில் பதிவு செய்ய வேண்டும் உடனடியாக தங்கள் மகளின் வங்கி கணக்கு எண் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். வங்கி உதவி மேலாளரிடம் பள்ளியில் உடனடியாக கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இதற்கு எல்லாம் உதவி மேலாளர் செவி சாய்க்க வில்லை, இதனால் மனவேதனை அடைந்த கீதா தனது மகளுக்கு வங்கி கணக்கு துவங்க வேண்டும் என்று வங்கியின் வாசல் முன் தனது மகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு வந்த மற்ற வாடிக்கையாளர்கள் வேதனையுடன் இவர்களை கடந்து சென்றனர். பிற வாடிக்கையாளர்களும் வங்கி உதவி மேலாளரிடம் தெரிவித்தும் புதிய கணக்கு துவங்குவதில் தரக்குறைவாக செயல்பட்டு வருகின்றனர்.
அரசு ஊழியர்கள், அரசியல் வாதிகளுக்கு மட்டுமே செயல்படுவதாக இந்த வங்கி தெரிகிறது. தற்போது புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு இத்தகைய வங்கி ஊழியர்களை பணி நீக்கம் செய்து ஏழை மக்களுக்கு உதவும் வகையில் வங்கிகள் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேதனை உடன் தெரிவித்தனர். செல்வா