சர்வதேச நீதி நாளை முன்னிட்டு இராமநாதபுர மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக இணையவழி கருத்தரங்கு
இராமநாதபுரம், ஜூலை.17,
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக சர்வதேச நீதி நாளை முன்னிட்டு மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில் இணைய வழி கருத்தரங்கு நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், அரசு சட்டக்கல்லூரியும் இணைந்து நடத்திய இந்த இணைய வழி கருத்தரங்கிற்கு மாவட்ட சட்ட பணிகள் சேர்மன் மகிழேந்தி மற்றும் அரசு சட்டக்கல்லூரி முதல்வர் தங்கரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி கதிரவன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு விதிகள்,பணிகள் ,செயல்பாடுகள் குறித்து சட்ட கல்லூரி முதல்வர் தங்கமணி விளக்கி பேசினார். திருவாடானை சட்டதன்னார்வலர் ஜெயந்தன் உட்பட மாவட்டத்தில் உள்ள பி.எல்.வி எனப்படும் சட்டத்தன்னார்வலர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இணைய வழி கருத்தரங்கு முடிவில் ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி பேராசிரியர் செல்வ விநாயகம் நன்றி கூறினார்.
சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்