இராமநாதபுரத்தில் வெற்றி சுடருக்கு மாவ ட்ட கலெக்டர் மரியாதை செலுத்தினார்
இராமநாதபுரம்,ஜூலை.15
1971-ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போர் நடைபெற்றது. அதில் இந்தியா வெற்றி பெற்றது. அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஐ.என்.எஸ் பருந்து கடற்படை தளத்தில், ஸ்வர்ணம் விஜய் வர்ஷா தீப நினைவு ஜோதி கோப்பை தூத்துக்குடி கட்டபொம்மன் கடற்படை தளத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு இந்தியா – பாகிஸ்தான் போரின் 50-ம் ஆண்டு வெற்றி தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாடினர். இதில் கடற்படையை சேர்ந்த வீரர்கள் தீப நினைவு ஜோதி கோப்பையை ஏந்தியபடி வாகனத்தில் வலம் வந்தனர். இதையடுத்து உச்சிப்புளி ஐ.என்.எஸ் பருந்து கடற்படை தளத்திலிருந்து வெற்றி தீப ஜோதி கோப்பையை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு சென்றார். ராமநாதபுர மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தடைந்த வெற்றி சுடருக்கு மாவட்ட கலெக்டர் சந்திரகலா மரியாதை செலுத்தினார். உடன் கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார்,வருவாய் ஆய்வாளர் காமாட்சி கணேசன் உடன் இருந்தார். சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்