ஏர்வாடியில் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் சிறப்பு பிரார்த்தனை
முதுகுளத்தூர்- ஜூலை:13,
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் திமுக மாவட்ட செயலாளரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் ஏர்வாடி தர்கா சுல்தான் சையது இப்ராகிம் ஷஹீத் ஒலியுல்லா தர்கா மக்பராவில் சிறப்பு பிரார்த்தனை செய்து அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, சாயல்குடி ஒன்றிய கழகசெயலாளர் ஜெயபாலன், ஒன்றிய அவைத் தலைவர் அமீர்ஹம்சா,இளைஞர்அணி பாலமுருகன்,முன்னாள் கவுன்சிலர் காதர்பாட்சா, கிளைச் செயலாளர்கள் சார்லஸ், குமாரராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் பிச்சை , வசந்தகதிரேசன், அம்மாவாசி, பானுமதி ராமமூர்த்தி, ஜலீல், இளைஞரணி அமைப்பாளர் ஹமீது சுல்தான், சத்தி யேந்திரன் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் உதய குமார், திமுக நிர்வாகிகள் ராஜா, இஸ்ஹாக், ஆசிக், அலி ஆகியோர் கலந்து கொண்டனர். வினோத்