உத்திரமேரூர் “ரபேல் லைப் கேர்” மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு 1000 குடும்பங்களுக்கு நோய்எதிர்ப்பு மாத்திரைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் MLA வழங்கினார்.
உத்திரமேரூர்,
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் செயல்பட்டுவரும் ரபேல் லைப் கேர் மருத்துவமனை சார்பில் நோய்எதிர்ப்பு மாத்திரைகள், மருந்துகள், முக கவசம், கிருமிநாசினி மற்றும் நலத்திட்ட உதவிகளை உத்திரமேரூர் தாலூக்காவிலுள்ள அனைத்து கிராம மக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. அதன் துவக்கவிழா உத்திரமேரூர் அடுத்த பருதிக்கொள்ளை என்னுமிடத்தில் ரபேல் லைப் கேர் மருத்துவமனையின் நிறுவனர் பிஷப் கிங்சிலி தலைமையில் நடைபெற்றது.
இதில் சுமார் ஆயிரம் பயனாளிகளுக்கு மருத்துவம் மற்றும் நிவாரணப்போருள்களை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் க.செல்வம் ஆகியோர் வழங்கி துவக்கிவைத்தனர்.
இந்தநிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் முககவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் கலந்துகொண்டனர். மருந்து, மாத்திரைகள் மற்றும் நிவாரண பொருள்களை பெற்றுச்சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் உத்திரமேரூர் திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், நகர செயலாளர் பரிவள்லல், தலைமை செயல்குழு உறுப்பினர் இரா.நாகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை, குணசேகரன், கூட்டுரவு பண்டகசாலை இயக்குனர் உதயசூரியன் உட்பட பலர் கலந்துகொண்டனர். புவிபால