இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
சனிக்கிழமை – 03/07/2021
என் தாசனாகிய மோசே மரித்துப்போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக்கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள். யோசுவா 1:2
மோசேக்கு இஸ்ரவேலரை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற தரிசனத்தை தேவன் கொடுத்ததார். யோசுவாவிற்கு கானானை சுதந்தரிக்கவேண்டும் என்ற தரிசனத்தைக் கொடுத்தார். கனவைக்கண்ட உடன் அதை நிறைவேறற தீர்மானிக்கவேண்டும். யோசுவா தீர்மானித்தார். மோசே திர்;மானித்தார். உங்கள் வாழ்க்கையில் கனவை நிறைவேற்ற தீர்மானியுங்கள். அடுத்த 5 வருடத்தில் அடுத்த 10 வருடத்தில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? என்பதை இப்பொழுதே கனவுகாண தீர்மானியுங்கள்;. 2021ம் வருடத்திற்குள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதையும் கனவுகாணுங்கள். உங்களால் கனவு காண முடியும் என்றால் அதை நிறைவேற்றவும் முடியும். கனவுகாணுங்கள் வெற்றிபெறுங்கள்.
அறிக்கை:
என்னை பெலப்படுத்துகின்ற கிறிஸ்துவினால் என் கனவுகளை நான் நனவாக்குவேன். அவரே என் வழியை வாய்க்கப்பண்ணுவார். ஆமெ;ன்
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com