இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
வெள்ளிக்கிழமை – 28/05/2021
நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? 4. இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மத்தேயு 7:3,4
நாம் எப்பொழுதும் விதைப்பதைவிட அதிகமாகவே அறுப்போம். அப்படியே கொடுப்பதைவிட அதிகமாகவே பெறுவோம். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறீர்களா? மற்றவர்களை மகிழ்ச்சியாக்குங்கள். என்னிடத்தில் யாரும் அன்பு கூறுவது இல்லை என்கிறீர்களா? அன்பு கூறுங்கள். அன்புகூறப்படுவீர்கள். விதைப்பதைவிட அதிகமாகவே அறுப்பீர்கள்.
அறிக்கை:
நான் கொடுப்பதினால் பெற்றுக்கொள்வேன். அன்பு கூறுவதினால் அன்பு கூறப்படுவேன். நான் கர்த்தருக்கு கொடுத்ததை அவர் வர்த்திக்கச்செய்து திரும்ப எனக்கு தருவார். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com