2011-ல் அ.தி.மு.க பதவியேற்கும்போது நிதிநிலைமை பற்றாக்குறையாக இருந்தது நிதிப் பற்றாக்குறையால் தான் கடன் வாங்கினோம் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேட்டி
திருச்சி,
நிதிப் பற்றாக்குறையால் தான் கடன் வாங்கினோம் என முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சேலத்தில் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: 2011-ல் அ.தி.மு.க பதவியேற்கும்போது நிதிநிலைமை பற்றாக் குறையாக இருந்தது. எனவே வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற கடன் வாங்கி நிறைவேற்ற வேண்டிய சூழலில் இருந்தோம். எல்லா மாநிலங்களும் கடன் வாங்கத்தான் செய்கிறது. மின்உற்பத்தி மற்றும் விநியோகம், போக்குவரத்து கழகத்தை நிர்வகிக்கும் செலவுகள் அதிகமாக இருந்தன. இருந்தபோதும் நாங்கள் மின்கட்டனங்களை உயர்த்தவில்லை. நஷ்டத்தில் அவை இயங்கின.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எந்த பெரிய திட்டத்தையும் இதுவரை நிறைவேற்ற வில்லை; சட்டமன்றத்தையே 100 நாட்கள் கழித்துதான் கூட்டுகின்றனர்.
பட்ஜெட் தாக்கல் செய்யும்போது செலவு கணக்கு தாக்கல் செய்வது வழக்கமான நடைமுறைதான்; அ.தி.மு.க.ஆட்சியில் நிர்வாக சீர்கேடு நடந்துள்ளது என்பது தவறான கருத்தாகும். இப்போது தி.மு.க., எங்களது ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களுக்குத்தான் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கின்றனர். நீட்தேர்வு பாதிப்பு குறித்து ஆராய்ந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ஒருசிலவற்றை தவிர பிற திட்டங்களுக்கான எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. ராஜேந்திரபாலாஜி குறித்து திட்டமிட்டு அவதூறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன; அவர் அ.தி.மு.க.வில்தான் உள்ளார், பா.ஜ.க.வில் இணைய மாட்டார் என அவர் கூறினார். எம்.கே. ஷாகுல் ஹமீது