ஸ்ரீ அன்னபூரணேஸ்வரி சமேத நம்பு ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷா வழிபாடு
தொண்டி, ஆக.7-
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மிக பழமையான ஸ்ரீ அன்னபூரணேஸ்வரி சமேத நம்பு ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு பால், பன்னீர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் அபிசேக பொடி ஆகிய வற்றால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. பூஜை ஏற்பாடுகளை வாசு, கருப்பசாமி, சுவாமிநாதன் ஆகியோர் செய்திருந்தனர். தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, கல்யாண நவக்கிரகம், பைரவர் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. முன்னதாக கோவிலுக்குள் நுழை பவர்களுக்கு சானிட்டைசர் வழங்கப்பட்டது. பூஜை முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்