வையம்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.1 கோடி மதிப்புள்ள வளா்ச்சிப் பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு ஆய்வு
திருச்சி,
வையம்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.1 கோடிக்கு மேல் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு ஆய்வு செய்தாா்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதிக்கு உட்பட்ட வையம்பட்டி ஒன்றியத்தில் சுமார் ரூ 1 கோடிககு மேலான பல்வேறு நலத்திட்டங்கள் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு ஆய்வு செய்தார். அந்த வகையில் ரூ. 41.03 லட்சத்தில் கிராம சந்தைகளுக்கு வையம்பட்டியில் புதிய கட்டடம் கட்டுதல், வையம்பட்டி காந்திநகா் மலை அருகில் ரூ.21.55 லட்சத்தில் 0.70 டன் அளவு கொண்ட நுண்ணுயிா் உர மையம், தொடா்ச்சியாக, நடுப்பட்டியில் ரூ.9.90 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவா், ரூ.23.15 லட்சத்தில் தேசிய நெடுஞ்சாலை புதுக்கோட்டை பிரிவு முதல் கல்பட்டி சத்திரம் வரை சாலை பலப்படுத்தும் பணி, கல்பட்டியில் ரூ. 6.25 லட்சத்தில் தனிநபா் இல்ல குடிநீா் இணைப்புகள் வழங்கும் பணிகளைப் பாா்வையிட்டாா்.பின்னா், புதுக்கோட்டை ஊராட்சியில் ரயில்வே கேட் அருகில் உள்ள ஒன்றியத் தோட்டத்தில் ரூ.1 லட்சத்தில் அடா்வன பழமரக்கன்றுகள் அமைக்கும் பணிகளை பாா்வையிட்டாா். ஆய்வின்போது, ஒன்றியக் குழுத்தலைவா் குணசீலன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாபு அண்ணாதுரை, கிஷன்சிங், உதவிப் பொறியாளா்கள் கணேஷ்வரன், உஷாராணி ஆகியோா் உடனிருந்தனா்.