வெள்ளபுத்தூர் ஊராட்சியில் அம்பேத்கர் அகாடமி சார்பில் வாலிபால் போட்டி.
செங்கல்பட்டு மாவட்டம் ஆக,22,
மதுராந்தகம் வட்டம், வெள்ளபுத்தூர் ஊராட்சியில் அம்பேத்கர் அகடமி சார்பில் வாலிபால் போட்டி நடைபெற்றது. இதில் 15 குழு பங்கேற்றனர் இப்போட்டியினை நமது கிராமத்தில் பிறந்து, வளர்ந்த, மாவட்ட குற்ற பிரிவு புலனாய்வு துறை காவல் உதவி ஆய்வாளர் பாபு, துவக்கி வைத்தனர். பின்பு வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முனுசாமி, ஊராட்சி செயலாளர் ராஜசேகர், கிராம உதவியாளர் ஜீவாகர், மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை வெள்ளபுத்தூர் ஊராட்சி ப.விஜயகுமார் செய்திருந்தார்.