வெங்கலகுறிச்சி கிராமத்தில் அறிவொளி இயக்கம் மூலம் கல்வி பயின்ற முதியோர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா … ஊராட்சி மன்ற தலைவர் எஸ்டி செந்தில்குமார் சான்றிதழ் வழங்கினார்!
இராமநாதபுரம், ஆக,13-
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் வெங்கலகுறிச்சி கிராமத்தில் அறிவொளி இயக்கம் மூலம் கல்வி பயின்ற முதியோர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா வெங்கலக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆலிஸ் தலைமையில் நடந்தது. இதில் வெங்கலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்டி செந்தில்குமார் கலந்து கொண்டு சான்றிதழை வழங்கினார்.
நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர், கிராம பெரியோர்கள் முத்துச்சாமி, பூவேந்திரன், கண்ணுச்சாமி, அரசு பாண்டி, சந்திரன், ரவி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெரியோர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.