வருகிற 20 ஆம் தேதி பெட்ரோல் விலை, எரிவாயு விலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கல், போன்ற மக்கள் விரோத ஒன்றிய அரசினைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து வேண்டும் திருச்சி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் தீர்மானம்
திருச்சி,
வருகிற 20 ஆம் தேதி பெட்ரோல் விலை, எரிவாயு விலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கல், போன்ற மக்கள் விரோத ஒன்றிய அரசினைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக கலந்து வேண்டும் என்று திருச்சி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நேற்று மாலை செயற்குழு கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் கேஎன் சேகரன் கோவிந்தராஜன் வன்னை அரங்கநாதன் செந்தில் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் கவிஞர் சல்மா மதிவாணன் சபியுல்லா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழகச் செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
வருகின்ற 20-ம் தேதியன்று, பெட்ரோல் விலை, எரிவாயு விலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கல், போன்ற மக்கள் விரோத ஒன்றிய அரசினைக் கண்டித்து நடைபெறவிருக்கின்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் இல்லங்களில் ஆங்காங்கே இந்த ஆர்ப்பாட்டம் பெரும் திறள் ஆர்ப்பாட்டமாக நடைபெற வேண்டும். மக்களிடையே இத்தகைய கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,நம் கழகத் தலைவர் அவர்களின் கட்டளையை தன் கடமையாக ஏற்று, கூட்டனி கட்சி நிர்வாகிகளுடன் ஒன்றினைந்து இத்தகைய கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக முப்பெரும் விழா திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நேற்று மாலை நேரலை செய்யப்பட்டது. நேரலையை தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கண்டுகளித்தனர். இந்நிகழ்வில்கே என் சேகரன் கோவிந்தராஜன் வண்ணைஅரங்கநாதன் செந்தில் கவிஞர்சல்மா மதிவாணன் சபியுல்லா மற்றும் மாவட்ட நகர பகுதி ஒன்றிய கழக செயலாளர்கள் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.