வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு ஆத்தூர் கிராமத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் ஊராட்சியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள் விழாவை பசுமை தாயக நாளாகவும், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, மரக்கன்றுகள் நடும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவில் மாநில துணை பொது செயலாளர் பொன்.கங்காதரன் தலைமையில் மாவட்ட செயலாளர் ஆத்தூர் வா.கோபாலகண்ணன் முன்னிலையில் பங்கேற்ற பாமக பொறுப்பாளர்கள் 100 மரக்கன்று நடப்பட்டனர். தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.05 சதவீத இட ஒதுக்கீடை தமிழக அரசாணை வெளியிட்டதற்கு இனிப்புகள் வழங்கி பாமகவினர் கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அச்சிறுபாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் விஜியகுமார் சிறப்பாக செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ஆதிகேசவன், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயந்தி பெருமாள், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் எடையாளம் கோமதி இளங்கோவன், ஒன்றிய துணை செயலாளர் தேவன், கிளைச் செயலாளர்கள் வஜ்ரவேலு பலராமன், உள்ளிட்ட பாமக கட்சியினர் பங்கேற்றனர். செய்தியாளர். ராஜசேகர்.