ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை சந்தித்ததாகச் செய்திகள் பரவிவருகின்றன. இதன் வெளிப்பாடுகள் என்னவாக இருக்கும்
மூத்த அரசியல் ஆய்வாளர் வினோத் சர்மா கூறுகையில், “பிரசாந்த் கிஷோர் தற்போது கேப்டன் அமரீந்தர் சிங்கின் அரசியல் ஆலோசகராக உள்ளார். சமீபத்திய காலங்களில், மமதா பானர்ஜிக்கு மேற்கு வங்கத்தில் ஒரு நல்ல வெற்றி கிடைத்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, அவர் சரத் பவாரையும் சந்தித்தார். அதன் பிறகு சரத் பவார் எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்தார்.
“இதுபோன்ற சூழ்நிலையில், சிதறியிருக்கும் எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைக்க முயற்சிக்கும் இணைப்பு பிரசாந்த் கிஷோர் என்று தெரிகிறது. பிகாரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் லாலுவும் நிதீஷும் ஒன்றாகத் தேர்தலைச் சந்தித்ததன் பின்னணியிலும் அவரது பங்கு இருந்தது.
இரு தரப்பும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சி நாலாபுறங்களிலிருந்தும் விமர்சனங்களை எதிர் கொண்டு வரும் ஒரு பின்னணியில் இது முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, இந்தச் சந்திப்பை பஞ்சாப் காங்கிரசில் கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து இடையே நடந்து வரும் மோதலுடன் தொடர்புடையதாகச் சிலர் பார்க்கிறார்கள். ராஜஸ்தானில் அசோக் கெஹ்லோட் மற்றும் சச்சின் பைலட் இடையே நடந்து வரும் இழுபறியும் இதனுடன் தொடர்புபடுத்திப்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் சத்தீஸ்கரில் கூட டி.எஸ்.சிங் தியோ மற்றும் பூபேஷ் பாகேல் இடையேயும் நிலைமை சரியில்லை. கடந்த ஆண்டு கட்சி மேலிடத்துக்கு எதிராக காங்கிரஸின் ஜி -23 குழுவிற்கு எதிரான விசாரணை இன்னும் முடிவடையவில்லை.
இந்த எல்லா காரணங்களுக்காகவும், இன்றைய தேதியில் காங்கிரசுக்கு ஒரு நல்ல ஒருங்கிணைப்பாளர் (கன்வீனர்) தேவை என்று வினோத் சர்மா கூறுகிறார். அவர் கூறுகிறார், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸை மட்டுமல்ல, எல்லா எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க முடியும். மேற்கு வங்கத் தேர்தலில் மமதா பானர்ஜியின் வெற்றியின் பின்னர், பிரசாந்த் கிஷோர் அரசியல் உத்தி வகுக்கும் பங்களிப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
பிரசாந்த் கிஷோர் தொடர்பான மற்றொரு உண்மை என்னவென்றால், தற்போதைய ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களான நரேந்திர மோதி, அமித் ஷா, ஜகன்மோகன் ரெட்டி, ராகுல் காந்தி, லாலு யாதவ், சரத் பவார், அகிலேஷ் யாதவ், மமதா பானர்ஜி ஆகிய அனைவருடனும் ஒரு காலத்தில் அவர் இணைந்து பணியாற்றியுள்ளார். இப்போது அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைப்பதில் எவ்வளவு வெற்றி பெறுவார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதை சரத் பவார் சிறப்பாகச் செய்வார் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
“ராகுலுக்கு தனது அமேதி தொகுதியைக் கூடத் தக்க வைக்க முடியவில்லை. கேரளம், அசாம் போன்ற மாநிலத்தில் ஆட்சி அமைந்தால், தனது புகழ் சற்று ஓங்கக்கூடும் என்று அவர் கணக்குப் போட்டார். அது தோல்வியடைந்தது. எனவே, காங்கிரஸ் இப்போது ஆளும் மாநிலத் தலைவர்கள், கட்சி மேலிடத்தை விட சக்தி வாய்ந்தவர்களாகத் தங்களைக் கருதுகிறார்கள்.
ராகுல் காந்திக்கு இளைஞர்கள் மீது அதிக நம்பிக்கை இருப்பதாகவும், பழைய காங்கிரஸ்காரர்களைத் தக்க வைப்பதில் சோனியா நம்பிக்கை கொண்டிருக்கிறார் என்றும் நம்பப்படுகிறது.
கட்சியை விட்டுச் செல்ல விரும்பும் ஒருவரை அமைதியாக அனுப்பி வைக்கிறார் ராகுல் என்றும் ஆனால் சோனியா அவரைத் தக்க வைக்க முயற்சி செய்கிறார் என்றும் ரஷீத் கூறுகிறார்.
“ராகுல் ஜனநாயக வழியை நம்புகிறார். ஆனால், கட்சி ஜனநாயக வழியில் இயங்கவில்லை.பழைய தலைவர்கள் நிலைமையைக் கையாளுதலில் திறமையானவர்கள். மத்திய பிரதேசத்தில் தேர்தலுக்குப் பிறகு கமல்நாத் மற்றும் திக்விஜய் சிங் ஒன்றுபட்டனர். ராஜஸ்தானில் அசோக் வெற்றி பெற்று முதல்வாரானார். பழைய தலைவர்களை வழிக்குக் கொண்டுவர இருவராலுமே முடியவில்லை” இதில் ஓர் உண்மை உள்ளது, இப்போது காங்கிரஸ் அரசாங்கம் சில மாநிலங்களில் மட்டுமே உள்ளது. காங்கிரஸ் தலைமை ஒரு வகையில் கட்சியை நடத்துவதற்கான வளங்களுக்காக இந்த மாநிலங்களை சார்ந்துள்ளது.
நிலைமையைச் சீராக்க, பிரியங்கா ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கலாம், ஆனால் அவரது பாணியும் கட்சிக்கு அதிகம் உதவவில்லை. மிகுந்த நம்பிக்கையுடன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு உத்தரப் பிரதேசத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதன் முடிவு அனைவருக்கும் தெரியும். பஞ்சாபில் கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோருக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டார். ஆனால் இன்றுவரை பயனில்லை.
காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்றத்திற்குள் கூட தலைவர்கள் பஞ்சம் உண்டு. மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பிலிருந்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை நீக்குவது குறித்த விவாதம் கடந்த பல நாட்களாக நடந்து வருகிறது. எனினும், காங்கிரஸ் கட்சி இந்த அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால், மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் வந்ததும், அவர் மீது நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் நாட்களில், எதிர்க்கட்சியின் எந்தவொரு முன்னணி உருவானாலும் மமதாவுக்குத் தடையாக இருக்கக் கூடாது. ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கும் பெரிய அந்தஸ்து இல்லை. ஆயினும்கூட, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஒன்றுபட வேண்டியிருந்தாலும், எதிர்க்கட்சித் தலைவருக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் பார்த்தால், ஆதிர் ரஞ்சன் டி.எம்.சியுடன் பொருந்தவில்லை. அவரது இடத்தில் வேறு யாராவது வந்தால், ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும்.
காங்கிரஸ் கட்சி, அகமது படேலின் இழப்பை உணர்கிறது. காரணம் இவ்வளவுக்கும் பிறகும் ஒரு தலைவர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மூத்த பத்திரிகையாளர் ரஷீத் கித்வாய், காங்கிரசின் மோசமான கட்டம் இருந்த போதெல்லாம், அதில் பிளவுபடும் நிலைமை ஏற்பட்டது, பல பெரிய தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறினர். இது புதிய நபர்களுக்கு ஒரு இடத்தை உருவாக்கியது, மேலும் அவர்கள் கட்சியில் நுழைவதற்கு இடம் கிடைத்தது.
கட்சி ஒரு மோசமான கட்டத்தை கடந்து செல்லும் இந்த முறை, காங்கிரஸை விட்டு வெளியேறும் மக்கள் அதிகம் இல்லை. வெளியேறியவர்களுக்கும் கட்சியில் பெரிதாக அந்தஸ்து இருந்ததில்லை. காங்கிரஸை விட்டு வெளியேறியவர்களில் ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாத், பிரியங்கா சதுர்வேதி, அபிஷேக் முகர்ஜி போன்ற முக்கிய முகங்கள் உள்ளன. ஆனாலும் கட்சி புதுப்பிக்கப்படவில்லை. இதன் காரணமாக, கட்சியில் புதிதாகச் சேர்ந்தவர்களும் தேக்க நிலையில் தான் உள்ளனர். இப்போது காங்கிரசுக்கு ஒரு முழுமையான அறுவை சிகிச்சை தேவை இதை பிராசாந்த் கிசோர் செய்வாரா அல்லது வேறு யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. புவி.பாலாஜி