ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சியில், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவிற்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய அரசு அந்த முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கத்தினர் மாநில துணைத்தலைவர் வீரசேகரன் தலைமையில் இன்று திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.