யானைகளை பொதுமக்கள் விரட்ட முயற்சி செய்ய வேண்டாம் என தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் வனத்துறையினர் அறிவுறை
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் அருகே குட்டியுடன் சாலையை கடந்த காட்டு யானைகள் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்து விட்டு மூங்கில் சோலையில் முகாமிட்டுள்ளது மேலும் இப்பகுதியின் அருகே உள்ள வீடுகளில் மேரக்காய் மற்றும் வாழை இருப்பதால் குன்னூர் வனசரகர் சசிக்குமார் தலமையில் குன்னூர் வனத்துறையினர் யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வராமல் கண்கானித்து வருகின்றனர் மேலும் யானைகள் குட்டியுடன் உள்ளதால் தீ மூட்டியோ பட்டாசுகள் வெடித்தோ யானைகளை பொதுமக்கள் விரட்ட முயற்சி செய்ய வேண்டாம் என தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் வனத்துறையினர் அறிவுறை வழங்கினர் கலாநிதி