முஸ்லிம் லீக் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவர் அப்துர் ரஹ்மான் இல்ல திருமண விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பேச்சு
திருச்சி. ஆக-23,
இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட நல்லதொரு குடும்பத்தின் திருமணம் என்பதால் இது நம் அனைவரின் குடும்ப விழாவாக நடைபெற்றது. முஸ்லிம் லீக் மீது இந்தக் குடும்பம் கொண்டுள்ள தொடரான ஈடுபாடு அன்புச் சகோதரர் அப்துர் ரஹ்மானுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகைச் சேர்ந்தவர் என்ற அடிப் படையில் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவர் பொறுப்பும் தமிழக முதலமைச்சரால் தரப்பட்டிருக்கிறது என்று திருமணம் விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் தெரிவித்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை தலைவரும் தமிழக வஃக்பு வாரியத் தலைவருமான அண்ணண் எம் . அப்துல் ரஹ்மான் மகன் சித்தீக் அஹமதுக்கும், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம். சிராஜுதின் மகள் ஆயிஷா நஸ்ரினுக்கும் ஆகியோருக்கும் சென்னை எஸ்.ஐ.இ.டி.யில் உள்ள கல்லூரி வளாகத்தில் 21.08.2021 சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த திருமணம் விழாவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை கேரளா மாநில யூத் லீக் தலைவர் முனவ்வர் அலி ஷிஹாப் தங்ஙள் கிராஅத் ஒதி தொடங்கி வைத்தார். 


இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கீன் மாநில துணைத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோதர் மொய்தீன், மாநில செயலாளர்கள் நெல்லை மஜீத், ஆடுதுறை ஷாஜகான், மில்லத் முஹம்மது இஸ்மாயில், வழக்கறிஞர் ஜீவகிரிதரன், கே.எம். நிஜாம்தீன், திருப்பூக ஹம்ஸா, கேஎம்சிசி பொதுச்செயலாளர் அபுபக்கர் சம்சுதீன், காத்தார் காயிதே மில்லத் பேரவை பொதுச்செயலாளர் திருச்சி முஹம்மது சுஹைல், தென்சென்னை மாவட்ட செயலாளர் மடுவை எஸ். பீர் முஹம்மது, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சிறுபான்மை பிரிவு நிர்வாகி எம்.இ. கனி, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நூருல்லா, யூத் லீக் மாநில பொருளாளர் அபுபாரீஸ்,
திருச்சி மணிச்சுடர் ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது, சந்திரசேகர், தேசிய எம்.எஸ்.எப். இணைச் செயலாளர் புளியங்குடி முஹம்மது அல் அமீன், யூத் லீக் மாநில துணைத் தலைவர் செய்யது பட்டாணி, செய்யது அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை அமைப்பாளர் கோம்பை ஜெ. நிஜாம்தீன், முத்துப்பேட்டை ஜமாஅத் நிர்வாகிகள், சென்னை கோடம்பாக்கம் பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இந்த திருமணத்தை மலப்புரம் மாவட்ட தலைவர் பானக்காடு செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள், சென்னை கோடம்பாக்கம் பள்ளிவாசல் தலைமை இமாம் ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின், தி.மு.க. மாநில பொருளாளர் டி.ஆர்.பாலு, மாநில துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா ஆகியோர் மணமக்னுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். பின்னர் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன், மணிச்சுடர் நாளிதழின் திருச்சி மாவட்ட ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் மணிச்சுடர் நாளிதழின் சிறப்பு மலர் நாளிதழை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார்கள்.
திருமணம் விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளரும், கேரளா சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் பி.கே. குஞ்சாலிகுட்டி, தேசிய அமைப்பு செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினர் இ.டி. முஹம்மது பஷீர், தமிழ்நாடு பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர், மனித நேய கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா, நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் மணமக்களை வாழ்த்தி பேசியதாவது :இந்த திருமணத்தில் கலந்து கொள்ள வந்த அனைவரையும் இருவீட்டார் சார்பில் அனைவரையும் வரவேற்கிறேன். தமிழகத்தில் அன்றும் இருந்தார், இன்றும் இருக்கிறார்; என்றும் இருப்பார் என்று நாமெல்லாம் மனதால் நினைவு கூரும் அளவுக்கு தனது நிறைவான பங்களிப்பை மனித சமூகத்திற்கு வழங்கி மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் நின்று – வெறும் நூறே நாட்களில் – இன்னும் நூறு ஆண்டுகளுக்கு எப்படி அரசியலை – ஆட்சியை நடத்த வேண்டும் எனப் பாடம் நடத்துவது போல அடித்தளமிட்டு, தமிழக மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்து, இந்தியாவின் எல்லா மாநில மக்களின் புருவங்களும் உயருமளவில் முன்னுதாரணமான ஆட்சி முறையால் உயர்ந்த இடத்தில் ஒளிரும் கலைஞர் அவர்களின் தவப்புதல்வர், இந்தத் தமிழகத்தின் விடிவெள்ளி முதலமைச்சர் தளபதியார் அவர்கள் இன்னும் சில நிமிடங்களில் இந்த விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உரையாற்றவிருக்கிறார்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முதன்மைத் துணைத் தலைவர், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் நிகழ் தலைவர் அருமைச் சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்களின் அன்பு மகன் சித்தீக் அவர்களுக்கும், அப்துர் ரஹ்மான் அவர்களின் அன்புச் சகோதரர் சிராஜுத்தீன் அவர்களது இனிய புதல்வி நஸ்ரின் அவர்களுக்கும் நடைபெறும் இந்த இனிய திருமண விழாவில் – கண்ணியத்திற்குரிய உலமா பெருமக்கள், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இனிய சொந்தங்கள் என ஏராளமான மக்கள் திரண்டிருந்து, மணமக்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறீர்கள்.
அண்ணனின் மகனும், தம்பியின் மகளும் இஸ்லாமிய முறைப்படி இங்கு திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். இஸ்லாமிய சட்டத்தில் இப்படித் திருமணம் செய்து கொள்வதற்கு வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. மூதறிஞர் ராஜாஜி அவர்களைப் பற்றி “ஐ மெட் ராஜாஜி” எனும் தலைப்பில் மோனிகா வில்சன் என்ற ஆங்கில மாது அருமையான நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் இப்படி ஒரு நிகழ்வை அவர் குறிப்பிடுகிறார்…
பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஓர் அண்ணனின் மகனும், தம்பியின் மகளும் ஒரே கல்லூரியில் இணைந்து படிக்கிறார்கள். அவர்களுக்கு இடையே இருந்த நட்பு நெருக்கமாகி, பிறகு காதலாக மாறி, திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு வந்து விடுகிறது. ஆனால் அவர்கள் சார்ந்த சமுதாயத்தில் அப்படிச் செய்து கொள்வதற்கு இடமில்லை. இவர்களுக்கோ கண்டிப்பாக திருமணம் செய்து கொண்டே ஆகவேண்டும் என்கிற நிலை. இப்படி ஓர் இக்கட்டான சூழலில் தீர்வை வேண்டி இப்பிரச்சினை இராஜாஜி அவர்களிடம் வருகிறது. “உடன் பிறந்த சகோதரர்கள் இருவரின் மக்கள் திருமணம் செய்து கொள்வதற்கு இஸ்லாம் ஒன்றில்தான் வழி இருக்கிறது… எனவே நீங்கள் முஸ்லிம்களாக மாறி விடுங்கள்… அந்த நிலையில் திருமணம் செய்து கொண்டு சிறிது காலம் வாழுங்கள்… பிறகு மீண்டும் இந்துவாக மாறிக் கொள்ளுங்கள்…” என்று ராஜாஜி அவர்கள் தீர்வு சொன்னதாக அந்த நூலில் பதியப்பட்டுள்ளது. இஸ்லாம் மார்க்கத்தில் இப்படியான திருமண உறவுமுறைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது; அந்த அடிப்படையிலேயே இந்தச் சிறப்பான திருமணமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதைச் சொல்வதற்காகத்தான் இதை நான் இங்கே குறிப்பிட்டுள்ளேன்.
இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் நான் அன்போடு தெரிவிக்க விரும்புவது, அன்புச் சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்களின் திருமணமும், பிறகு அவரது தம்பி சிராஜுத்தீன் அவர்களின் திருமணமும் எனது தலைமையில்தான் நடைபெற்றன. முத்துப்பேட்டை நேனா மூனா அப்துல் காதிர் ஸாஹிப் என்று சொன்னால் அறியாத மக்களே இருக்க மாட்டார்கள். அந்த ஊரின் மிகச் சிறந்த தலைவர். இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் காலம்தொட்டு, சிராஜுல் மில்லத் அவர்களின் காலத்திலும் நாவலர் யூசுப் அவர்களுடன் இணைந்தும் இந்த இயக்கத்திற்காக, சமுதாயத்திற்காக ஏராளமான பங்களிப்புகளைச் செய்து, பெரும் பெரும் தியாகங்களைச் செய்த பெருமகனார்தான் அவர். அவர்களது குடும்பத்தில் இதுவரை நடந்த அத்தனைத் திருமணங்களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் முன்னிலையில் – குறிப்பாக இந்த காதர் மொகிதீன் கலக்காமல் நடந்ததில்லை. ஆக, தந்தை அப்துர் ரஹ்மான் அவர்களின் திருமணமும் காதர் மொகிதீன் தலைமையில் நடந்தது. இப்பொழுது அவர் பெற்ற மகனின் திருமணமும் காதர் மொகிதீன் தலைமையில்தான் நடக்கிறது. ஒருவேளை இவர்கள் பெற்றெடுக்கும் மக்களுக்கு நடைபெறும் திருமணமும் அதே காதர் மொகிதீன் தலைமையில்தான் நடக்குமோ என்னவோ… ஆக, இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட நல்லதொரு குடும்பத்தின் திருமணம் என்பதால் இது நம் அனைவரின் குடும்ப விழாவாக இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முஸ்லிம் லீக் மீது இந்தக் குடும்பம் கொண்டுள்ள தொடரான ஈடுபாடு அன்புச் சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்களை மாநில முதன்மை துணைத் தலைவர் என்ற இடத்தில் நிறுத்தி இருக்கிறது. அதே அப்துர் ரஹ்மானுக்கு – இந்திய யூனியன் முஸ்லிம் லீகைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவர் பொறுப்பும் தமிழக முதலமைச்சரால் தரப்பட்டிருக்கிறது.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட்ட மூன்று தொகுதிகளிலும் வெற்றிபெற முடியாமல் போனது கட்சியினர் மத்தியிலும், சமுதாய மக்களிடத்திலும் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் பொறுப்பை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மைத் துணைத் தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு வழங்க வேண்டும் என முஸ்லிம் லீக் சார்பில் நாம் வைத்த கோரிக்கையைப் பெருமனதோடு ஏற்றுக் கொண்டு, தமிழக முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் அந்தப் பொறுப்பை அன்புச் சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு வழங்கியிருக்கிறார். அதற்காக அவருக்கு நமது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்ள வேண்டிய கடமை இருக்கிறது. அந்தக் கடமையைச் செய்வதற்கான ஒரு தருணமாகவும் இந்த விழாவை நான் பார்க்கிறேன். யாருக்கு நன்றி சொல்லிக் கொண்டு இருக்கிறோமோ அவரே இப்பொழுது மேடைக்கு வந்து கொண்டிருக்கிறார்… வருக! வாழ்க!! வளர்க!!! எமது மனமார்ந்த நன்றியை பெறுக!!!! என்று அன்போடு கூறிக்கொள்கிறேன். மிகச் சரியான நேரத்திலே இந்த அவைக்கு வந்து, எங்கள் நன்றி தெரிவிப்பை ஏற்றுக்கொண்ட தமிழக முதலமைச்சர் தளபதியார் அவர்களை வாழ்த்தி, வரவேற்று எனது உரையை முடிக்கிறேன் நன்றி இவ்வாறு அவர் பேசினார். ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில தலைவர் மவ்லவி காஜா முகைதீன் பாகவி ஹஜ்ரத் அவர்கள் துஆ செய்தார்கள்.
இந்த திருமணத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிட கழக தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள் ராணிப்பேட்டை காந்தி, மா. சுப்பிரமணிமன், செஞ்சி மஸ்தான், பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், கனிமொழி, சு. திருநாவுக்கரசர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ்கனி, ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, திருச்சி மாவட்ட அரசு டவுன் காஜி மவ்லவி ஜலீல் சுல்தான் மன்ப ஈ, மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் கவிஞர் சல்மா,
நமக்காக டிவி நிர்வாக இயக்குநர் ஷாநவாஸ் கான், தமிழ்நாடு வக்ஃப் வாரிய செயல் அலுவலர் டாக்டர் பரிதா பானு, வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் பாத்திமா முஸ்ஸபர், தமிழக மரபு சார எரிசக்தி இயக்குனர் ஆசியா மரியம், முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் ஜி.எம். அக்பர் அலி, இயக்குநர் அமீர், ஜமால் முஹம்மது கல்லூரி பொருளாளர் ஹாஜி ஜமால் முஹம்மது, டாக்டர் சையது சத்தார், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சென்னை பிரிவு தலைவர் அப்துல் காதர், பை ஸ்டார் முஹம்மது இக்பால், தி.மு.க. பத்னமாபுரம் தொகுதி அமைப்பாளர் எம்.எஸ். அலிகான், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர்கள் ப. அப்துல் சமது, அசன் முஹம்மது, முனைவர் ஜெ. ஹாஜா கனி, குன்னங்குடி அனீபா, எஸ்.டி.பி.ஐ. தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி, மாநில தலைவர் நெல்லை முபராக், முன்னாள் வக்ஃப் வாரிய தலைவர் ஹைதர் அலி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமும் அன்சாரி, தமிழக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா, சிறுபான்மை ஆணைய.தலைவர் பீட்டர் அல்போன்ஸ், காயல் இளவரசு, இலங்கை தொழில் அதிபர் கீழக்கரை சதக் அப்துல் காதர், அய்யம்பேட்டை அஞ்சுமன் ஜபருல்லா, ஒயிட் ஹவுஸ் பாரி, அப்போலோ அனீபா,
தொழிலதிபர் பரிதா பாபு, சென்னை அடையார் பள்ளிவாசல் தலைவர் முனைவர் மவ்லவி சதுதித்தீன் பாகவி, நீடூர் மிஸ்பாஹுல் ஹீதா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி முஹம்மது இஸ்மாயில் பாகவி, தொழிலதிபர் எஹியா, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கௌரி, நக்கீரன் கோபால் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், அனைத்து மாவட்டத்தில் இருந்து தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், அனைத்து மாவட்டத்தின் அணிகளின் நிர்வாகிகள, பல்வேறு அரசியல் கட்சி மற்றும் இயக்கங்களின் தலைவர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற முன்னாள் இந்நாள் உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நீதி அரசர்கள், அரசு உயர் அதிகாரிகள், காவல் துறை மற்றும் உளவுத் துறை அதிகாரிகள், சங்கைமிகு உலமா பெருமக்கள், ஊடக ஆளுமைகள், ஊடகத்துறையை சேர்ந்தவர்கள், சமுதாய பேராளுமைகள், ஜமாஅத் நிர்வாகிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹாஜி ரவூப் ஹக்கீம், இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் எச்.எம்.எம்ஶ்ரீ ஹரீஸ், பைசல் காசிம் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் மூத்த ஊடகவியலாளர் ஹாஜி என். எம். அமீன் ஆகியோர் மணமக்களை வாழ்த்து செய்திகள் அனுப்பினார்கள் . விழா முடிவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில முதன்மை துணைத் தலைவரும், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை மாநில செயலாளர் காயல் மகபூப் தொகுத்து வழங்கினார்.