முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் திருச்சி மாவட்ட தலைவராக மும்தாஜ் நியமனம்
பொது செயலாளர் காயல் அப்பாஸ் அறிவிப்பு !
திருச்சி,செப். 01-
திருச்சி , மாவட்ட தலைவராக கே ..மும்தாஜ் நியமனம் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் கட்சியின் மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:-
முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் தமிழக மாநில தலைவர் பாத்திமா அலியின் ஓப்புதலோடு திருச்சி , செந்தண்ணீர் புரத்தை சேர்ந்த கே.மும்தாஜ் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் இயக்கத்தின் மாவட்ட தலைவராக நியமிக்கபட்டுள்ளார். மேலும் கே .மும்தாஜ் தலைமையில் இயக்கத்தின் உறுப்பினராக மகளிர்கள் பலரும் இனைந்துள்ளதை முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் வரவேற்கிறது . பதவியின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அணைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடு பட வேண்டும் , இயக்கத்தின் விதி முறைகளுக்கு கட்டு பட்டு செயல் பட வேண்டும், இயக்கத்தின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் என கேட்டு கொள்கி றோம் . மேலும் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் திருச்சி மாவட்ட தலைவராக நியமிக்க பட்டுள்ள கே. மும்தாஜிக்கு இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அணைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்கிறோம் . இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.