முன்னாள் அமைச்சர் புலவர் பூ.ம.செங்குட்டுவன் மறைவு
திருச்சி,
மணப்பாறை தொகுதிக்கு பேரிழப்பு மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான ப. அப்துல் சமது இரங்கல் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான ப. அப்துல் சமது வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் திமுகவின் முன்னோடி, 1996ஆம் ஆண்டில் மருங்காபுரி தொகுதியில் வெற்றி பெற்று முத்தமிழ் அறிஞர் கலைஞரின் அமைச்சரவையில் கால்நடைத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர் புலவர் பூ.ம.செங்குட்டுவன்.
சிறந்த இலக்கிய தமிழ் பேச்சாளராகத் திகழ்ந்தவர். தனக்கு வழங்கப்பட்ட கட்சி பொறுப்பிலும், ஆட்சிப் பொறுப்பிலும் திறம்பட செயல்பட்டவர். இவர் அமைச்சராக இருந்தபோது தான் இத்தொகுதி மக்களின் தாகம் தீர்க்க காவிரி கூட்டுக்குடிநீர் கொண்டு வந்தது காலத்திற்கும் அழியாத நற்பெயரைப் பெற்று அண்ணாருக்கு தந்தது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மணப்பாறை தொகுதியில் எனது வெற்றிக்காக, உடல் பலவீனமான நிலையிலும் தீவிரமாக களப்பணியாற்றியவர். வெற்றிக்குப் பின் சந்தித்த போதெல்லாம் தொகுதி மக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகள் குறித்து பல்வேறு நல்ல ஆலோசனைகளை வழங்கினார்.
அவரது மறைவு இத்தொகுதி மக்களுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும், கட்சியின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாகுல்ஹமித்